10 பேரிடம் ஆன்லைனில் பண மோசடி: புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் விசாரணை!

புதுச்சேரியில் 10 பேர் ஆன்லைன் மோசடி கும்பலிடம் ரூ.1.11 லட்சம் இழந்துள்ளது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

புதுச்சேரியில் 10 பேர் ஆன்லைன் மோசடி கும்பலிடம் ரூ.1.11 லட்சம் இழந்துள்ளது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

author-image
WebDesk
New Update
Puducherry Police

புதுச்சேரியில் 10 பேர் ஆன்லைன் மோசடி கும்பலிடம் ரூ.1.11 லட்சம் இழந்துள்ளது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Advertisment

புதுச்சேரியில், வில்லியனுார், முத்து பிள்ளைபாளையத்தை சேர்ந்தவர் ரஞ்சித்.சமூக வலைதளத்தில் வந்த ஐ.பி.எல்., டிக்கெட் விற்பனை தொடர்பான விளம்பரத்தை நம்பி, அதில் இருந்த இணையதளத்தில் 33 ஆயிரம் ரூபாய் செலுத்தி, ஐ.பி.எல்., டிக்கெட் முன்பதிவு செய்து மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தார்.

அதேபோல், உருளையன்பேட்டையை சேர்ந்த சுகஷினி என்பவர், இன்ஸ்டாகிராமில் குறைந்த விலையில் ஐபோன் விற்பனை விளம்பரத்தை பார்த்து, அதனை உண்மை என நம்பி, 11 ஆயிரத்து 747 ரூபாய் செலுத்தி ஐபோன் ஆர்டர் செய்து ஏமாற்றம் அமைந்துள்ளார். அவரைப்போல், முத்தியால்பேட்டை சேர்ந்த ராஜேஷ்குமார், குறைந்த வட்டியில் லோன் தருவதாக மர்மநபர் கூறியதை நம்பி, 12 ஆயிரம் ரூபாய் ஏமாந்துள்ளார்.

இதேபோல், நைனார்மண்டபம் பவித்ரா 18 ஆயிரத்து 200, சின்னகடை உமாபதி 11 ஆயிரம், லாஸ்பேட்டை ரவி 11 ஆயிரம், புதுச்சேரி சங்கர் 3 ஆயிரத்து 800, காமராஜர் நகர் வெங்கடேஷ் 3 ஆயிரத்து 500, திலாஸ்பேட்டை ஜெயகுமார் 5 ஆயிரம், முதலியார்பேட்டை பிரபாகர் 2 ஆயிரத்து 500 என, மொத்தம் 10 பேர் மோசடி கும்பலிடம் 1 லட்சத்து 11 ஆயிரத்து 700 ரூபாய் ஏமாந்துள்ளனர்.

Advertisment
Advertisements

இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்த புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Puducherry

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: