பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 5ஆவது பயிர் காப்பீட்டு வாரம் சனிக்கிழமை (ஜூலை 1) முதல் தொடங்கி 7ஆம் தேதி வரை நடக்கிறது. பிரிமியம் தொகையுடன் மானிய தொகையும் அரசே இருக்கு செலுத்துகிறது. இத்திட்டத்தில் விவசாயிகள் பயன்பெற வேண்டுமென புதுவை அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
Advertisment
அதன்படி, ஜூலை 1 முதல் ஜூலை 7 வரை 5வது பயிர் காப்பீட்டு வாரம் பல்வேறு கிராமங்களில் நடத்தப்படுகிறது. இந்த நிலையில் நாளை பரப்புரை வாகனத்தை முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கிவைக்கிறார். தொடர்ந்து, பல்வேறு கிராமங்களில் பயிர் காப்பீட்டு சம்பந்தமான கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன.
இத்திட்டத்தில் பதிவு செய்திடும் அனைத்து விவசாயிகளுக்கும் அவர்கள் செலுத்த வேண்டிய பிரிமியம் தொகையுடன் மானிய தொகையும் அரசே செலுத்திடும். இத்திட்டத்தின் பயன்கள் குறித்து விவசாயிகளிடையே விழிப்புணர்வு முகாம் நடத்தப்படும். பயிர் அறுவடை சோதனைகள் நவீன செயலி மூலம் நடத்தப்பட்டு, அதன் முடிவுகளின்படி மகசூல் இழப்பு ஏற்படும் இடங்களில் பதிவு செய்த விவசாயிகளுக்கு உரிய பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்படும்.
அரசால் அங்கீகரிக்கப்பட்ட இன்சுரன்ஸ் நிறுவனங்களான பஜாஜ் அலையன்ஸ் நிறுவனத்தின் மூலம் புதுச்சேரி பகுதியிலும், ஷீமா இன்சுரன்ஸ் நிறுவனம் மூலம் காரைக்கால் பகுதியிலும் மற்றும் ஐசிஐசிஐ லொம்பார்டு இன்சுரன்ஸ் நிறுவனம் மூலம் ஏனாம் பகுதியிலும் செயல்படுத்தப்பட உள்ளது.
பூரணாங்குப்பம், காட்டேரிகுப்பம், பரிக்கல்பட்டு, பிள்ளையார்குப்பம், கரையாம்புத்தூர், சாத்தமங்கலம், நெட்டப்பாக்கம், பி.எஸ்.பாளையம், ஏம்பலம், செட்டிப்பட்டு, கிருமாம்பாக்கம், சுத்துக்கேணி ஆகிய பகுதிகளில் இந்த முகாம் நடக்கிறது.
செய்தியாளர் பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“