/indian-express-tamil/media/media_files/2025/09/30/p-2025-09-30-07-12-56.jpg)
"கேட்கும் தொகையை கட்டிய பிறகு லாப பணத்தை தராமல் மேலும் தொகை கட்ட வேண்டும் என சொல்லும்போது தான் மக்களுக்கு சந்தேகம் எழுந்து எதிர் கேள்விகள் கேட்க ஆரம்பிக்கிறனர்." என்று புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் தெரிவித்துள்ளது.
வீட்டில் இருந்த படியே ஆன்லைனில் வேலை எனக்கூறி 300க்கும் மேற்பட்ட பொது மக்களை ஏமாற்றி 20 கோடிக்கு மேல் மோசடி செய்த இணைய வழி குற்றவாளிகள் குறித்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்தியாவில் இணைய வழி குற்றங்கள் நாளுக்கு நாள் பெருகி பல வகைகளாக குற்றங்களாக உருபெற்று வருகின்றது. குறிப்பாக வீட்டில் இருந்தே சம்பாதிக்க ஆர்வம் காட்டும் பெண்கள் இல்லத்தரசிகள் வேலை இல்ல பட்டதாரிகள் போன்றோரை வயது வரம்பு இல்லாமல் இணைய மோசடிக்காரர்கள், ஏமாற்றிவருகின்றனர் குற்றவாளிகள் முதலில் சமூக வலைதளமான வாட்ஸ் ஆப், முகநூல் மற்றும் டெலிக்ராம் போன்றவற்றில் இருந்து முன் பின் தெரியாத எண்களில் நம் அண்டை நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ், ஸ்ரீலங்கா, சீனா, கம்போடியா நைஜீரியா போன்ற நாடுகளில் இருந்து கொண்டு பல MNC(Multi National Company) நிறுவனங்களின் பெயர்களில் வீட்டில் இருந்தே வேலை செய்து சம்பாரிக்கலாம் என்று மக்களை உசுப்பி விடுவது போல் மெசேஜ் அனுப்புகின்றனர்.
பிறகு சிறு சிறு வேளைகளான வீடியோக்களுக்கு லைக் கொடுப்பது Review செய்வது ஆன்லைன் Share செய்வது, Typewriting Work போன்றவற்றை செய்ய வைத்து ஒரு வீடியோக்கு ருபாய் 50ல் இருந்து 150 வரை லாபம் ஈட்ட வைத்து ஒரு நாளைக்கு 500ரூபாயில் இருந்து 1000ருபாய் வரை வருமானத்தை அவர்களுடைய வங்கி கணக்கிற்கே அனுப்பி ஆசையை தூண்டுகின்றனர். வீட்டிலுருந்தே துரிதமாக சம்பாதித்த ஆசையில் பொது மக்கள் மேலும் மேலும் பணத்தை ஈட்ட வேண்டும் என்ற நோக்கில் அதிகமான வீடியோக்களுக்கு லைக் மற்றும் Review செய்கின்றனர். ஒரு கட்டத்தில் இணைய குற்றவாளிகள் இவர்களிடம் நீங்கள் அதிகம் வருமானம் ஈட்டி அதிக ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளதால் ப்ரீபெய்ட் டாஸ்க் எனும் புதிய ஏமாற்று வழியை அறிமுகம் செய்து அதில் இன்வெஸ்ட் செய்ய வேண்டும் இல்லையெனில் வேலையாய் தொடர முடியாது என பீதி ஏற்படுத்துகின்றனர். இவர்கள் நோக்கத்தை புரிந்து கொண்ட ஒரு சிலர் விலகிக்கொள்கின்றனர்.
மீதி உள்ளவர்கள் புரிந்தும் புரியாமலும் அவர்கள் கூறுவதை செய்ய ஆரம்பிக்கின்றனர் அப்படி வருபவர்களுக்கு மோசடிக்காரர்கள் போலியான வலைத்தளங்களை உருவாக்கி அதில் பொது மக்களை கணக்கு தொடங்க வைத்து அவர்கள் கூறும் தொகையை முதலீடு செய்ய வைக்கிறார்கள். இவர்களும் முன்பு லாபம் ஈட்டிய மலைப்பில் அவர்கள் வேலை செய்து சம்பாதிக்க வந்ததை மறந்து பணத்தை முதலீடு செய்ய ஆரம்பிக்கிறார்கள் சிறிது நேரம் கழித்து அவர்கள் கணக்கில் பெரும் தொகை லாபம் கிடைத்துள்ளது போல் இணைய வழி குற்றவாளிகள் ஒரு பிம்பத்தை உருவாக்குகின்றனர்.
அதனுடைய ஆபத்தை அறியாத அப்பாவி பொது மக்கள் அந்த பிம்பத்தை அப்படியே நம்பி மேலும் பணத்தை முதலீடு செய்கின்றனர் அவர்களிடம் பணம் இல்லையென்றாலும் பிறரிடம் கடன் பெற்று முதலீடு செய்கின்றார்கள் ஒரு கட்டத்தில் பெரும் தொகை லாபம் கிடைக்க பெற்றதை பார்த்த பின் அதை வெளியே எடுக்க முற்படும் போது இணைய வழி குற்றவாளிகள் அவர்கள் கணக்கை முடக்கி நீங்கள் அதிக தொகை ஈட்டியுள்ளதால் அதற்கு அரசாங்க வரி, சேவை வரி, செயல் முறை கட்டணம் என்ற பெயரில் பணம் கட்ட சொல்கின்றனர். லாப தொகை அதிகம் என்பதாலும் அதை எப்படியாவது பெற்றே ஆகவேண்டும் எனும் நோக்கில் மோசடிக்காரர்கள் கூறும் தொகையை அவர்கள் கூறும் பல்வேறு வங்கி கணக்கிற்கு அது யாருடைய வங்கி கணக்கு அது அந்த நிறுவனத்தோடு தொடர்புடையதா இல்லையா மற்றும் வெளிநாடுகளில் இயங்கும் நிறுவனங்களுக்கு அதன் பெயரில் வங்கி கணக்கு இல்லாமல் வெவ்வேறு இந்தியர்களின் வங்கி கணக்கில் பணம் பெற வேண்டிய அவசியம் என்ன என்பதை சற்றும் சிந்தித்து பார்க்காமல் கேட்கும் தொகையை கடன் பெற்றாவது அனுப்புகின்றனர்.
கேட்கும் தொகையை கட்டிய பிறகு லாப பணத்தை தராமல் மேலும் தொகை கட்ட வேண்டும் என சொல்லும்போது தான் மக்களுக்கு சந்தேகம் எழுந்து எதிர் கேள்விகள் கேட்க ஆரம்பிக்கிறனர். அப்படி கேள்வி கேட்டதும் மோசடிக்காரர்கள் தொடர்பை துண்டித்து கொண்டு மாயமாகிவிடுகின்றனர் இதன் பிறகு தான் பொது மக்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதையே உணருகின்றனர். இவ்வாறாக பொது மக்கள் தங்கள் இழந்த பணத்தை மீட்டு தர கோரி புதுச்சேரி இணைய வழி காவல் நிலையத்தில் 300க்கும் மேற்பட்ட புகார்கள் 20 கோடி இழப்புக்கு பதிவாகி உள்ளது. இதில் அதிகம் ஏமாந்து வந்த புகார்கள் படித்த பெண்கள் மற்றும் பொது மக்கள். ஆகையால் பொதுமக்கள் சமூக வலைத்தளம் மற்றும் இணையதளம் மூலம் வரும் பகுதி நேர வேலை வாய்ப்பு வீட்டில் இருந்தே வேலை செய்து சம்பாரிக்கலாம் என்று வரும் விளம்பரத்தை நம்பி உழைத்து சம்பாரித்த பணத்தை டெலெக்ராம் வாட்ஸாப்ப் முகநூலில் வரும் போலியான பகுதி நேர வேலை வாய்ப்பு விளம்பரத்தை நம்பி ஏமாற வேண்டாம் என புதுச்சேரி இணைய வழி போலீசார் அறிவுறுத்துகின்றனர்.
மேலும் இணைய வழி குற்றம் சம்பந்தமாக புகார் கொடுக்கவும் அல்லது ஏதேனும் சந்தேகம் இருந்தால் இணைய வழி காவல் நிலையத்தில் *இலவச தொலைபேசி எண்: 1930 மற்றும் 0413-2276144/9489205246 மற்றும் மின்னஞ்சல்: cybercell-police@py.gov.in தொடர்பு கொள்ளலாம். இணைய பக்கத்திலும் புகார் அளிக்கலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.