புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் ஆய்வாளர் கீர்த்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இணைய வழி சம்பந்தமாக ஏதாவது புகார் இருப்பின் 1930 என்ற எண்ணிற்கு தெரிவிக்கலாம்.
மேற்கண்ட எண் கட்டணமில்லா தொலைபேசி அழைப்பாகும். உங்களுடைய கைபேசியிலிருந்து மேற்கண்ட எண்ணிற்கு புகாரை தெரிவிக்கலாம்.
நீங்கள் கொடுக்கின்ற புகார் உடனடியாக கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு உங்களுக்கான தகவல் complaint number உங்கள் மொபைல் எண்ணிற்கு குறுந்தகவல் மூலம் தெரிவிக்கப்படும்.
பணம் இழந்தது, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இணையவழி சம்பந்தமாக உங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்திய எந்த புகாராக இருப்பினும் மேற்கண்ட எண்ணிற்கு தெரியப்படுத்தலாம்.
தகவல் தெரிவித்தவரின் விவரம் ரகசியம் காக்கப்படும். பெண்களுடைய விருப்பமிருந்து அவர்களே அவர்களுடைய தொலைபேசி எண்ணை புகாரியில் தெரிவித்தால் மட்டுமே அல்லது விலாசத்தை நீங்களே தெரிவித்தால் மட்டுமே மேற்கண்ட ஆன்லைன் கம்பளைண்டில் உங்களுடைய விவரம் தெரிய வரும்.
இன்ஸ்டாகிராம் டெலிகிராம் போன்ற சமூக வலைதள கணக்குகளில் பெண்கள் பாதிக்கப்பட்ட புகார்கள் அதிகம் வருவதனால் இதுபோன்ற செயலிகளில் பெண்கள் தங்கள் புகைப்படத்தை அல்லது தனிப்பட்ட புகைப்படங்களை பகிர்வதை தவிர்த்தல் வேண்டும்.
மேலும் மேற்கண்ட டெலிகிராம் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் யார் அதை உபயோகப்படுத்துகிறார் என்பதை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
பெரும்பாலான கணக்குகள் போலியான பெயரில் உருவாக்கப்படுவதால் பெண்கள் இதுபோன்ற சமூக வலைதள உபயோகப்படுத்தும் பொழுது எச்சரிக்கையாக இருக்குமாறு புதுச்சேரி இணைய வழி காவல்துறை தங்களை கேட்டுக் கொள்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“