New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/04/tamil-indian-express-2023-04-25T173943.269.jpg)
இரவு 10 மணிக்கு மேல் ஆடல் பாடல் நிகழ்ச்சி நீடிக்க கூடாது என டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
புதுச்சேரியில் அதிக ஒலி எழுப்பிய நடன மதுபார் ஒலிபரப்பு சாதனங்களை பறிமுதல் செய்த போலீசார் பொறுப்பாளர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இரவு 10 மணிக்கு மேல் ஆடல் பாடல் நிகழ்ச்சி நீடிக்க கூடாது என டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Puducherry News in Tamil: புதுவையில் இரவில் பாடல், நடனத்துடன் கூடிய நடன மதுபார்களுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நடன மதுபார்களில் இரவு 10 மணிக்கு மேல் சவுண்ட் சிஸ்டம் பயன் படுத்தக்கூடாது என போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
இந்த நிலையில், பெரியகடை உதவி ஆய்வாளர் சக்திவேல் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது இரவு 11.45 மணிக்கு மேல் மிஷன் வீதியில் உள்ள ஓட்டலில் 5வது மாவடியில் இயங்கிய நடன மது பாரில் அதிக சத்தம் கேட்டது. இதனையடுத்து, அங்கு சென்ற போலீசார் அவர்களை எச்சரித்தனர். ஆனால் நடன மதுபார் பொறுப்பாளர் போலீசாரை வெளியேறும்படி கூறினார்.
இதையடுத்து நடன மதுபாரில் இருந்த மைக் ஸ்டாண்டர், கேபிள் உட்பட ஒலிபரப்பு சாதனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், பொறுப்பாளர் மீது அதிக ஒலி எழுப்புதல் தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.