கிரிப்டோ கரன்சி மோசடி: தமன்னா, காஜல் அகர்வாலிடம் விசாரிக்க புதுச்சேரி போலீசார் முடிவு!

கிரிப்டோ கரன்சி மோசடி கும்பலை சேர்ந்த கோயம்புத்துார் ரமேஷ்குமார் மகன் நித்தீஷ்குமார் ஜெயின் (36), அரவிந்த்குமார்,( 40), ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

author-image
WebDesk
New Update
Cripto Currency

காஜல் அகர்வால் - தமன்னா

கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கில் நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Advertisment

புதுச்சேரி, லாஸ்பேட்டையைச் சேர்ந்த பி.எஸ்.என்.எல்., ஓய்வு பெற்ற ஊழியர் அசோகன்,(70) இவர், கிரிப்டோ கரன்சியில் ஆஷ்பே என்ற இணையதள பக்கத்தில் ரூ. 98 லட்சம் முதலீடு செய்து, ஏமாந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து, கிரிப்டோ கரன்சி மோசடி கும்பலை சேர்ந்த கோயம்புத்துார் ரமேஷ்குமார் மகன் நித்தீஷ்குமார் ஜெயின் (36), அரவிந்த்குமார்,( 40), ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், 9 பேரை தேடி வரும் நிலையில், இதுகுறித்து போலீசார் கூறுகையில், ''கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கில் தொடர்புடையவர்கள் கோயம்புத்துார், மாமல்லபுரம், மும்பை உள்ளிட்ட இடங்களில் மோசடி செய்த பணத்தை கொண்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து, மிக பெரிய அளவில் விழாக்களை நடத்தியுள்ளனர். இதில், சினிமா நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால் உள்ளிட்ட சில பிரபலங்களை அழைத்து வந்துள்ளது தெரியவந்தது.

இதற்காக நடிகைகளுக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்பட்டது. அந்த பணம் எந்த வங்கிக் கணக்கில் இருந்து அனுப்பப்பட்டது. அவர்களுக்கும் இந்த மோசடி கும்பலுடன் தொடர்பு உள்ளதா என பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளது.இதனால், சம்மந்தப்பட்ட நடிகைகளான தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Kajal Agarwal Tamanna Bhatia

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: