புதுச்சேரி கூட்டுறவு சொசைட்டி சட்டத்தின் கீழ் கூட்டுறவு துறையில் சங்கங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலான சங்கங்கள், முறையாக செயல்படாமல் பெயரளவுக்கு உள்ளதாக, கூட்டுறவு துறைக்கு புகார்கள் சென்றன. இது தொடர்பாக கூட்டுறவு பதிவாளர் தீவிர விசாரணை நடத்தினார்.
இதனையடுத்து தற்போது 86 கூட்டுறவு சங்கங்கள் அதிரடியாக கலைக்கப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை கூட்டுறவு பதிவாளர் யஸ்வந்தையா பிறப்பித்தார். இந்த பட்டியலில் புதுச்சேரி பல்கலைக்கழகம், புதுச்சேரி பொறியியல் கல்லுாரி, எரிசாராய ஆலை, காவலர், சுதேசி காட்டன் மில் உள்பட பல்வேறு அரசு ஊழியர்களின் கூட்டுறவு சங்கங்களும் அடங்கியுள்ளன.
இந்த கலைப்பு பட்டியல் அரசாணையாக பொதுமக்களின் பார்வைக்காக தற்போது வெளியிடப்பட்டுள்ளன. கடந்த 32 ஆண்டுகளில் புதுச்சேரியில் செயல்படாத 6,237 சங்கங்கள் அதிரடியாக கலைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், இந்த ஆண்டு கூட்டுறவு துறை 86 கூட்டுறவு சொசைட்டிகளை அதிரடியாக கலைத்துள்ளது.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“