scorecardresearch

பள்ளிச் சீருடை- புத்தகப் பை சகிதமாக சட்டமன்றம் வந்த தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்: வேற லெவல் புதுவை அரசியல்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளி சீ்ருடை வழங்காததை கண்டித்து புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு பள்ளி சீருடை அணிந்தும் புத்தகப் பை மாட்டிக்கொண்டு வந்த திமுக எம்.எல்.ஏக்கள்.

puducherry Dmk MLAs attend Assembly Meeting in School uinform Tamil News
Puducherry Dmk Mlas came to Assembly Meeting Wearing Government School Uniforms On Bicycles Tamil News

புதுச்சேரி: மாணவர்கள் சீருடை விவகாரம் மற்றும் மாநில அந்தஸ்து கோரிக்கையை முன்வைத்து பேரவையில் இருந்து அனைத்து திமுக உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.

புதுச்சேரி 15 சட்டப்பேரவையின் 3-வது கூட்டத்தொடரின் 3-ம் பகுதி பேரவை இன்று காலை கூடியது. பேரவை தொடங்கியதும் சபாநாயகர் செல்வம் குறள் வாசித்து பேரவையை தொடங்கி வைத்தார். தொடர்ந்து மறைந்த இங்கிலாந்து எலிசபெத் ராணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக சட்டப்பேரவைக்கு வந்த திமுக எம்.எல்.ஏக்களான எதிர்கட்சி தலைவர் சிவா தலைமையில், நாஜீம், அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார், நாக தியாகராஜன் ஆகியோர் பள்ளி சீருடை அணிந்தும், புத்தக பை மாட்டிக்கொண்டு சைக்கிளில் வந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளிகள் தொடங்கி ஒருவருட காலம் முடிவடைய உள்ள நிலையில் இதுவரை மாணவர்களுக்கு அரசு பள்ளி சீருடை வழங்காததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பள்ளி சீருடை அணிந்து சைக்கிளில் வந்தனர்.

பின்னர் பேரவையில் மாநில அந்தஸ்து தொடர்பாகவும், பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்குவது தொடர்பாக எந்த அறிவிப்பும் அறிவிக்காததால் திமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திமுக எதிர்கட்சி தலைவர் சிவா, ஆளும் அரசும், அதிகாரிகளும் ஒன்றரை வருடங்கள் ஆகியும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இதுவரை சீருடை, நோட்டு புத்தகங்ங்கள் வழங்கவில்லை. அட்சய பாத்திரம் என்ற தனியார் அமைப்பு மூலம் தரமான மதிய உணவும் மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை. பஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் இதை நினைவு கூறும் வகையில் அங்கு உற்பத்தி செய்யப்படும் சீருடைகளை அணிந்து வந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளோம். இந்த அரசால் சட்டமன்ற மேம்பாட்டு நிதியை கூட வழங்காத அரசாக இந்த அரசு உள்ளது.

ஜி20 மாநாடு மாதந்தோறும் புதுச்சேரியில் நடத்த வேண்டும். ஏனென்றால் இதற்காக ஒருவாரத்தில் 10 சாலைகள் போடப்பட்டது. இதனால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். பலமுறை கோரிக்கை வைத்து போடப்படாத சாலைகள் இந்த மாநாட்டால் போடப்பட்டடுள்ளது என்றார்.

செய்தி: பாபு ராஜேந்திரன்

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Puducherry dmk mlas attend assembly meeting in school uinform tamil news

Best of Express