புதுச்சேரி, நேதாஜி சாலை ரயில் நிலையத்தை ஒட்டி, மூங்கில் பொருட்கள் விற்பனை செய்து கொண்டு ஒரு குடும்பம் பல வருடங்களாக பிளாட் பாரத்தில் வசித்து வருகின்றனர். அவர்களுடன் நாய் குட்டிகள், பூனை குட்டிகள் வசிப்பது வழக்கம். இந்நிலையில், காலை 8.30 மணி அளவில் வாய்ஸ் பார் வாய்ஸ்லெஸ் தலைவர் அசோக் ராஜ் அந்த பக்கமாக சென்றுள்ளார். அப்போது சிலர் மாமிசத்தை வெட்டி கொண்டு இருந்தனர்.
இதனைப் பார்த்து சந்தேகம் அடைந்த அவர், அந்த பகுதியை ஆய்வு செய்ததில் அது நாய் குட்டிகளின் மாமிசம் என்று உறுதி ஆனது. அந்த வெட்டபட்ட கால்களை அங்கு உயிரோடு இருக்கும் நாய் குட்டிகளும், பூனை குட்டிகளும் கடித்து கொண்டு இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அசோக் ராஜ், ஒதியன் சாலை காவல் நிலையத்துற்கு தகவல் கூறியதை அடுத்து உடனே சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறை அந்த மாமிசத்தை கைப்பற்றி, அவர்களை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றுள்ளது.
நகர பகுதியில் அவ்வபோது நாய்க்குட்டிகள், பூனை குட்டிகள் காணாமல் போவதாக வாய்ஸ் பார் வாய்ஸ்லஸ் க்கு தகவல் வந்த நிலையில், கையும் களவுமாக இவர்கள் பிடிபட்டது அதை உறுதி செய்கிறது. மேலும் இவர்கள் இந்த நாய், பூனை மாமிசத்தை தாங்கள் உண்ண சமைத்தார்களா, இல்லை பொது மக்களுக்கும் விற்பனை செய்கிறார்களா என்ற கோணத்தில் காவல் துறை விசாரித்து வருகிறது.
இது தொடர்பாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதனால் புதுச்சேரி நகர மக்கள் பீதியில் உள்ளனர். மேலும் வார இறுதி நாட்களில் ஒரு லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர் என்றும், அவர்களுக்கு என்ன பாதுகாப்பு? எனவும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
மேலும், உடனடியாக உணவு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளவர்களை தகுந்த முறையில் விசாரணை செய்ய வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.