தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் கூட்டணியிட்டும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் கண்டது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டன.
இந்நிலையில், புதுச்சேரி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் 4,26,005 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவர் 1,36,516 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பா.ஜ.க-வின் நமச்சிவாயம் 2,89,489 வாக்குகளும், நா.த.க-வின் மேனகா 39,603 வாக்குகளும், அ.தி.மு.க-வின் தமிழ்வேந்தன் 25,165 வாக்குகளும் பெற்றனர். நோட்டாவுக்கு 9,679 வாக்குகள் பதிவாகின.
புதுச்சேரி தொகுதி வாரியாக வாக்கு விவரம:-
உருளையன்பேட்டை தொகுதி
காங்கிரஸ் 12496
பாஜக 4400
அதிமுக 341
நாம் தமிழர் 530
நோட்டா 242
வித்தியாசம்: 8096 வாக்குகள் வித்தியாசம் காங்கிரஸ் முன்னிலை
கதிர்காமம் தொகுதி
காங்கிரஸ் 12206
பாஜக 10924
வித்தியாசம்:1282 வாக்குகள்
காங்கிரஸ் முன்னிலை
காமராஜர் நகர் தொகுதி
காங்கிரஸ் 15316
பாஜக 10299
காங்கிரஸ் முன்னிலை வித்தியாசம்: 5015வாக்குகள்
ஏனாம்
காங்கிரஸ்- 6573
பாஜக -19959
பாஜக முன்னிலை
வித்தியாசம்: 13386 வாக்குகள்
ஏம்பலம் தொகுதி
காங்கிரஸ் 16564
பாஜக 11078
காங்கிரஸ் முன்னிலை
வித்தியாசம்: 5486 வாக்குகள்
மங்கலம் தொகுதி
காங்கிரஸ் 15544
பாஜக 14646
காங்கிரஸ் முன்னிலை
வித்தியாசம்: 898 வாக்குகள்
மன்னாடிபட்டு தொகுதி
காங்கிரஸ் -13251
பாஜக -12556
காங்கிரஸ் முன்னிலை
வித்தியாசம்: 595 வாக்குகள்
முத்தியால்பேட்டை தொகுதி
காங்கிரஸ் 12098
பாஜக -5545
காங்கிரஸ் முன்னிலை
வித்தியாசம் 6553வாக்குகள்
அரியாங்குப்பம் தொகுதி
காங்கிரஸ் -16370
பாஜக 10109
காங்கிரஸ் முன்னிலை
வித்தியாசம் 6261வாக்குகள்
நெட்டப்பாக்கம் தொகுதி
காங்கிரஸ் 14929
பாஜக 11108
காங்கிரஸ் முன்னிலை
வித்தியாசம்: 3821வாக்குகள்
மாஹே தொகுதி
காங்கிரஸ் -12,229
பாஜக -7734
காங்கிரஸ் முன்னிலை
வித்தியாசம்: 4495 வாக்குகள்
லாஸ்பேட்டை தொகுதி
காங்கிரஸ் 14921
பாஜக -6604.
புதுச்சேரி (பாண்டிச்சேரி) மக்களவைத் தொகுதி மொத்தம் 30 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. அவை 1.மண்ணடிப்பேட்டை 2.திருபுவனை 3.ஓசூடு 4. மங்கலம் 5.வில்லியனூர் 6.ஒழுக்கரை 7.கதிர்காமம் 8.இந்திரா நகர் 9.தட்டஞ்சாவடி 10.காமராஜ் நகர் 11.லாஸ்பேட்டை 12.காலா பேட்டை 13.முத்தையால் பேட்டை 14.ராஜ் பவன் 15.உப்பளம் 16.ஓர்லம்பேத் 17.நெல்லி தோப்பு 18.முதலியார் பேட்டை 19.அரியாங்குப்பம் 20.மனவேலி 21.எம்பலம் 22.நெட்டப்பாக்கம் 23.பாகூர் 24.நெடுங்காடு 25.திருநள்ளார் 26.காரைக்கால் வடக்கு 27.காரைக்கால் தெற்கு 28.நாரவ் டி.ஆர் பட்டினம் 29.மாகே 30.ஏனாம்
புதுச்சேரி மக்களவைத் தொகுதி பாரம்பரியமாக தேசிய கட்சிகளின் கோட்டை ஆகும். 2024 மக்களவைத் தேர்தலில் இந்த தொகுதியில் போட்டியிட்ட பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் இவர்கள்தான்:
1. வி.வைத்திலிங்கம் (காங்கிரஸ்), ஏ.நமச்சிவாயம் (பா.ஜ.க), தமிழ் வேந்தன் (அ.தி.மு.க), அலங்கார வேலு (பகுஜன் சமாஜ் கட்சி), மேனகா (நாம் தமிழர் கட்சி)
ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் புதுவை மக்களவைத் தொகுதியில் 78.80% வாக்குகள் பதிவானது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் இங்கு இந்தியா கூட்டணிக்கு சாதகமாக வெளியாகின.
ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நிலவரங்களை உடனுக்குடன் இந்த செய்தி தொகுப்பில் காணலாம். (அப்டேட்டுக்கு இணைந்திருங்கள்)
புதுவை மக்களவை தொகுதியின் கடந்த கால தேர்தல் நிலவரங்களை இங்கே காணலாம்.
2019 புதுச்சேரி மக்களவைத் தேர்தல் நிலவரம்:
வி. வைத்திலிங்கம்( காங்கிரஸ்) 4,44,981 வாக்குகள்.
கே. நாராயணசாமி (என்.ஆர் காங்கிரஸ்) 2,47,956 வாக்குகள்.
முகமது சுப்பிரமணியன் (மக்கள் நீதி மய்யம்) 38,068 வாக்குகள்.
ஷர்மிளா பேகம் (நாம் தமிழர் கட்சி) 22,857 வாக்குகள்.
2014 புதுச்சேரி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்:
ஆர்.ராதா கிருஷ்ணன் (என்.ஆர் காங்கிரஸ்) 2,55,826 வாக்குகள்.
வி. நாராயணசாமி (காங்கிரஸ்) 1,94,972 வாக்குகள். எம்.வி ஓமலிங்கம் (அ.தி.மு.க) 1,32, 657 வாக்குகள். நசீம் (தி.மு.க) 60,580 வாக்குகள். அனந்தராமன் (பா.ம.க) 22,754 வாக்குகள். விஸ்வநாதன் (சி.பி.ஐ) 12 709 வாக்குகள். ரங்கராஜன் (ஆம் ஆத்மி) 8,307 வாக்குகள்
2009 புதுச்சேரி மக்களவை த் தொகுதி தேர்தல் முடிவுகள்: வி. நாராயணசாமி (காங்கிரஸ்) 3,00,391 வாக்குகள். எம்.ராமதாஸ் (பா.ம.க) 2,08,619 வாக்குகள். அசனா (தே.மு.தி.க) 52,638 வாக்குகள். விஸ்வேஸ்வரன் (பா.ஜ.க) 13,442 வாக்குகள்.
2004 புதுச்சேரி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்: எம்.ராமதாஸ் (பா.ம.க) 2,41,653 வாக்குகள். லலிதா குமாரமங்கலம் (பா.ஜ.க) 1,72,472 வாக்குகள். நம்பியார் (ஐக்கிய ஜனதா தளம்) 27,546 வாக்குகள்
1999 புதுச்சேரி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்: ஃபரூக் (காங்கிரஸ்) 1,65, 108 வாக்குகள். எம்.ராமதாஸ் (பா.ம.க) 1,40,920 வாக்குகள். பி.கண்ணன் (தமிழ் மாநில காங்கிரஸ்) 1,11,737 வாக்குகள்.
1998 புதுச்சேரி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்: எஸ்.ஆறுமுகம் (தி.மு.க) 1,68,122 வாக்குகள். பி. சண்முகம் (காங்கிரஸ்) 1,31,348 வாக்குகள். லக்கி பெருமாள் (அ.தி.மு.க) 1,02,622 வாக்குகள்.
1996 புதுச்சேரி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்: ஃபரூக் (காங்கிரஸ்) 1,83,986 வாக்குகள். எஸ். ஆறுமுகம் (தி.மு.க) 1,83,702 வாக்குகள். எஸ்.தியாகராஜன் (பா.ஜ.க) 20,351 வாக்குகள். பவானி மதுரகாவி (பா.ம.க) 1,97,92 வாக்குகள். பாலசுப்பிரமணியன் (ம.தி.மு.க) 13,397 வாக்குகள்.
1991 புதுச்சேரி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்: பருக் (காங்கிரஸ்) 2,07,922 வாக்குகள். லோகநாதன் (தி.மு.க) 1,40,313 வாக்குகள். பவானி மதுரகாவி (பா.ம.க) 13.375 வாக்குகள். ராமசாமி (பா.ஜ.க) 7,728 வாக்குகள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.