புதுச்சேரி ஏனம் தொகுதியில் முதியோர் பென்ஷன் வழங்குவதில் முன்னாள் எம்.எல்.ஏ - தற்போது எம்.எல்.ஏ காரசார வாக்குவாதம் நடந்த நிலையில், அங்கே இருந்த சண்டை போடாதீர்கள் என மத்தியஸ்தம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி பிராந்தியமான ஏனாமில் முதியோர் ஓய்வூதியம் வழங்கும் நிகழ்ச்சி எம்.எல்.ஏ, கொல்லபள்ளி ஸ்ரீனிவாஸ் அசோக் தலைமையில் நடைபெற்றது.
இந்த உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் புதுச்சேரி அரசின் டெல்லி பிரதிநிதி மல்லாடி கிருஷ்ணராவ் கலந்து கொண்டார்.
அப்போது அந்த விழாவில் கலந்து கொண்ட பயனாளிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் அசோக் ஒருபுறம் உதவி தொகைக்கான ஆணையை வழங்கிக் கொண்டிருக்கும்போது அவர் அருகே நின்றிருந்த முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் அவரும் தனது பங்குக்கு முதியோர் உதவித்தொகை ஆனையை வழங்கினர்.
அப்போது சட்டமன்ற உறுப்பினர் கொல்லப்பள்ளி ஸ்ரீனிவாஸ் அசோக்… தான் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தின் விளைவாக தான் பயனாளிகளுக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்க படுகிறது..
ஆனால், இந்த நிகழ்ச்சிக்கு விதிகளை மீறி ஏன் வந்தீர்கள் என்று மல்லாடி கிருஷ்ணாராவ்விடம் எம்.எல்.ஏ அசோக் கேட்டபோது இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து அங்கிருந்த ஆர்.ஏ.ஓ.முனிசாமி இருவரையும் சரி செய்ய முயன்றார். ஆனால், நெறிமுறைகளை மீறி கூட்டத்திற்கு வந்தாலும் மல்லாடிக்கு தான் மதிப்பளிப்பதாகவும், பயனாளிகளுக்கு ஓய்வூதிய ஆனையை வழங்கும்போது அவரும் வந்து வழங்குவது என்ன நியாயம் என்றார். ? என்று மீண்டும் எம்எல்ஏ அசோக் கேள்வி எழுப்பினர்..
நெறிமுறைகளுக்கு மாறாக அதிகாரிகள் செயல்படுவதாகவும், சட்டமன்ற உறுப்பினருடன் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு மற்றவர்களை வரவழைத்து இடையூறு மற்றும் மோதலை ஏற்படுத்த முயல்வதாகவும், புதுச்சேரி சட்டப்பேரவை சிறப்புரிமைக் குழுவில் புகார் அளிப்பதாகவும் எம்எல்ஏ அசோக் கூறினார். இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகளின் நடத்தை குறித்து புகார் அளிக்கப்படும் என்றார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"