பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் தலைவரை, அரியாங்குப்பம் காவல்நிலைய ஆய்வாளர் தாக்கிய நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரியில், பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் தலைவரை, அரியாங்குப்பம் காவல்நிலைய ஆய்வாளர் தாக்கிய நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்சியின் துணைத் தலைவர் அனந்தராமன் தலைமையில் அரியாங்குப்பம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், 300 மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் ஈடுபட்டனர்.
/indian-express-tamil/media/media_files/2025/04/01/SIzYd4CgR5CkYpYVxxDU.jpg)
புதுச்சேரியில் பி.ஆர்,ஜி.ஆர்.எஸ் மாநிலத் தலைவர் எந்த குற்ற பின்னணியும் இல்லாத அமுதரசன் அவர்களை தவளக்குப்பம் அரியாங்குப்பம் ஆய்வாளர் கலைச்செல்வன் மிகவும் வன்மத்துக்குரிய முறையில் பேசியும் உடல் ரீதியாகவும் அடித்து துன்புறுத்தியுள்ளார்கள். இதனை கண்டித்து இன்று புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி முன்னிலையிலும் அனைத்து பிரிவு காங்கிரஸ் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு ஆய்வாளர் அவர்களுக்கு எதிராக கோஷங்களை மற்றும் எதிர்ப்பை அரியாங்குப்பம் காவல் நிலையம் முன்பு தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.