scorecardresearch

தமிழக கள்ளச் சாராய மரணம்: புதுவை ரங்கசாமி அரசு மீது நாராயணசாமி கடும் தாக்கு

புதுவையில் கலால்துறை அதிகாரிகள் மாதந்தோறும் பணம் வசூல் செய்து ரங்கசாமிக்கு நேரடியாக பணம் தருவதாக பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன்- நாராயணசாமி

Puducherry
Puducherry

புதுவையில் கள்ளச் சாராயம் இல்லை என உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். மரக்காணத்தில் கள்ளச் சாராய சில்லறை விற்பனை செய்தோர் புதுவையைச் சேர்ந்த இருவரிடம் வாங்கியதாக வாக்குமூலம் தரப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கள்ளச் சாராயத்தை புதுவையில் இருந்து கடத்தி சென்று தமிழகத்தில் விநியோகித்து உயிர்பலியான முழு பொறுப்பை புதுவை அரசு ஏற்க வேண்டும். கலால்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமியும், உள்துறை அமைச்சர் நமச்சிவாயமும், அதிகாரிகளும் பொறுப்பேற்க வேண்டும்.

தமிழகத்தில் காவல்துறை, கலால்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் புதுவையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கள்ளச் சாராய பேர்வழிகளுக்கு புதுவை அரசு உடந்தையாக உள்ளது. காவல்துறை லஞ்சம் வாங்கிக் கொண்டு கள்ளச் சாராய விற்பனையை அனுமதிக்கிறது. அரசு வேடிக்கை பார்க்கிறது. கலால்துறை அதிகாரிகள் மாதந்தோறும் பணம் வசூல் செய்து ரங்கசாமிக்கு நேரடியாக பணம் தருவதை பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன். தற்போது தமிழகத்தில் நடந்த உயிரிழப்புக்கு புதுவை அரசுதான் பொறுப்பு.

கள்ளச் சாராய உயிரிழப்புக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் தமிழகத்தில் ராஜினாமா செய்ய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோரிக்கை வைத்துள்ளார். புதுவையில் பாஜக-என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசு நடக்கிறது.

அதே கோரிக்கையை புதுவையிலும் முன்வைத்து முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ராஜினாமா செய்ய வலியுறுத்துவாரா? இதற்கு அண்ணாமலை பதில் சொல்ல வேண்டும். ரங்கசாமி அரசு தான் உயிர் பலிக்கு பொறுப்பு ஏற்க வேண்டும்.
என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக ஆட்சியில் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த முடியாமல் தமிழகத்துக்கு அனுப்பி உயிர்பலி ஏற்பட்டுள்ளது ஆட்சியாளர்களால் புதுவைக்கு அவமானம் ஏற்பட்டுள்ளது.

முதலமைச்சர் ரங்கசாமி எந்த கடவுளை வேண்டினாலும் பாவ மன்னிப்பு கிடைக்காது. கள்ளச் சாராயத்தை கட்டுப்படுத்த முடியாதற்கு முக்கியக் காரணம் ஊழல்தான். இதற்கு சிபிஐ விசாரணை வைக்க தயாரா? மக்கள் கொதித்து போயுள்ளனர்.
கள்ளச் சாராயத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கா விட்டால் போராட வேண்டிய நிலை ஏற்படும். சில அரசியல் தலைவர்களும் இதில் கூட்டில் உள்ளதால் வாய் திறக்க மாட்டார்கள் என்று விமர்சனம் செய்தார்.

செய்தி: பாபு ராஜேந்திரன்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Puducherry former cm narayanasamy slams rangasamy government over spurious liquor case

Best of Express