"மத்திய அரசின் நான் பணிபுரிகிறேன் எனக்கு மாறுதல் உத்தரவு வந்துவிட்டது. எனவே, என் வீட்டில் உள்ள பொருட்களை விற்பனை செய்ய உள்ளேன். என தகவல் வந்தால் பொதுமக்கள் ஏமாற வேண்டாம்." என புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் அதிரடியான உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளனர்.
இதுகுறித்து புதுச்சேரி சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் கூறியதாவது:-
பழைய புதிய பொருட்களை வாங்க விற்க உதவும் செயலிகள் மற்றும் சமூக வலைதளங்களான OLX, Facebook, Instagram, Second Hand Mall, Koove, ListUp, Tradly, Quikr, Zefo, MaxDeal, EBay, Spoyl, Tips To Sell Used Things Online போன்றவற்றில் இணைய வழி மோசடிக்காரர்கள் தங்களை ராணுவ வீரர்கள், மத்திய ரிசர்வ் போலீஸ் அல்லது மத்திய அரசில் பணிபுரிகின்றேன் என்றும், தற்போது தனக்கு மாறுதல் வந்து விட்டதால் தான் அடுத்த வாரம் டெல்லி செல்ல வேண்டும் என்றும் மேற்கண்ட பொருட்களை விற்க இருக்கின்றேன் என்று புகைப்படங்களுடன் கூடிய விளம்பரங்கள் தற்பொழுது மேலே குறிப்பிட்டுள்ள செயலீகளில் (APP) நிறைய வருகிறது.
Advertisment
Advertisements
அவர்களை தொடர்பு கொண்டால் இரண்டு லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருளை 90 ஆயிரத்திற்கு உங்களுக்கு கொடுக்கின்றேன். ஏனென்றால் இவ்வளவு தூரம் எங்களால் இந்த பொருட்களை எடுத்துச் செல்ல முடியாது என்று அவர்கள் தெரிவித்தவுடன் சிறிது பேரம் பேசி அவர்கள் கொடுக்கின்ற வங்கி கணக்குகளில் (UPI ID) நாம் அட்வான்ஸ் தொகையாக 10 ஆயிரம் அல்லது 20 ஆயிரம் பணத்தை செலுத்திய உடன் அவர்களுடைய இணைப்பு அனைத்தும் துண்டிக்கப்பட்டு விடும்.
இது போன்ற குறைந்த விலைகளில் பொருள் கிடைக்கிறது என்று பொதுமக்கள் யாரும் பணத்தை மோசடி நபர்களிடம் செலுத்தி ஏமாற வேண்டாம் என்று புதுச்சேரி இணைய வழி குற்றப்பிரிவு காவல் துறை தங்களை எச்சரிக்கை செய்கிறது. மேலும் இதுபோன்ற இணைய வழி மோசடிக்காரர்கள் தங்களை ராணுவ வீரர்கள் அல்லது மத்திய படை பிரிவில் பணிபுரிவதாகவே சொல்கிறார்கள்.
மோட்டார் சைக்கிள் ஏசி பிரிட்ஜ் வாஷிங் மெஷின் பெரிய தொலைக்காட்சி போன்றவற்றின் படத்தை போட்டு அதிக விலை உள்ள பொருட்கள் குறைந்த விலைக்கு வாங்கிவிடலாம் என்று பேராசை பட்டு மக்கள் பணத்தை இழக்கிறார்கள். கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் இதுபோன்று 14 புகார்கள் பதிவாகியுள்ளது. ஆகவே, பொதுமக்கள் இதுபோன்ற மோசடிக்காரர்களிடம் ஏமாற வேண்டாம் என்று மீண்டும் புதுச்சேரி இணை வழி குற்றப்பிரிவு காவல்துறை தங்களை எச்சரிக்கை செய்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil