புதுச்சேரி தவளக்குப்பம் பள்ளியில் நடந்த சிறுமியின் பாலியல் வன்கொடுமையை மூடி மறைக்கும் என். ஆர். காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணி அரசை கண்டித்து இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
புதுச்சேரி தவளக்குப்பம் பள்ளியில் சிறுமிக்கு நடந்த பாலியல் வன்கொடுமையை மூடி மறைக்கும் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க கூட்டணி அரசை கண்டித்தும், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள் மீது தாக்குதல் செய்த தவளக்குப்பம் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கல்வித்துறை முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் சாரதா தலைமை தாங்க நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.