மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்காலிக போனஸ் கணக்கிடும் உச்சவரம்பை ரூ.7 ஆயிரமாக நிர்ணயித்து நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. மத்திய அரசின் சம்பள முறையைப் பின்பற்றும் புதுவை யூனியன் பிரதேச ஊழியர்களுக்கும், இந்த உத்தரவுகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், புதுவை அரசில் பணிபுரியும் குரூப் பி மற்றும் சி பிரிவு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக ரூ.7 ஆயிரம் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுளள்து. மத்திய அரசின் உத்தரவைப் பின்பற்றி, புதுவை அரசின் நிதித் துறை சார்பு செயலர் சிவகுமார் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு நகலானது இன்று (அக்.18) அனைத்து துறை செயலர்கள், துறை தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“