Puducherry government imposes corona tax on petrol, diesel price : கொரோனா ஊரடங்கு காரணமாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தொழிற்சாலைகள் மூடப்பட்டு வேலைகள் எங்கும் நடை பெறாமல் உள்ளது. கடந்த 65 நாட்களுக்கும் மேலாக உள்நாட்டு உற்பத்தி மற்றும் தொழில்கள் ஏதும் நடைபெறாமல் மொத்தமாக தேங்கி இருப்பதால் பொருளாதார மந்த நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் பல்வேறு பொருட்களுக்கு கொரோனா வரி போடப்பட்டு வருகிறது. ஏற்கனவே இந்தியாவில் இருக்கும் பல்வேறு மாநிலங்களில், மதுக்கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பானங்களுக்கு வரி விதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது புதுவை மாநிலம் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கொரோனா வரியை விதித்துள்ளது. புதுவையில் பெட்ரோல் மீதான வரி 5.75 சதவீதமாகவும் டீசல் வரி 3.65 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
ஏற்கனவே அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்திருக்கின்ற நிலையில், தற்போது பெட்ரோல் டீசல் விலையும் உயர்ந்திருப்பது மக்களுக்கு பெரும் அவதியை உருவாக்கியுள்ளது.