குறைகளை சொல்லும் மக்கள் கடிதங்கள்: விரைந்து தீர்க்க புதிய நடைமுறை; புதுச்சேரி ஆளுனர் பேச்சு

மக்கள் மன்றம் என்ற இந்த ஒரு செயல் திட்டத்தின் மூலமாக புதுச்சேரி காவல்துறை ஒரு வரலாற்று மைல் கல்லை எட்டிருக்கிறது என்று நம்புகிறேன்.

author-image
WebDesk
New Update
Puduch Governor

புதுச்சேரி கவர்னராக பொறுப்பேற்றதிலிருந்து இன்று வரை மக்கள் தங்கள் குறைகளைச் சொல்லி அனுப்பும் கடிதம் அதிக அளவில் வருகின்றன அவற்றுக்கு தீர்வு காணும் நடைமுறையை விரைவுபடுத்த வேண்டும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ் நாதன் கூறியுள்ளார்.

Advertisment

புதுச்சேரி காவல்துறை சார்பில் நடைபெறும் “மக்கள் மன்றம்“ தொடக்க விழாவில் துணைநிலை ஆளுநர் கைலஷ்நாதன் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறுகையில்,  பொதுமக்கள் குறை தீர்ப்பு நாள் என்று சொல்லப்படும் “மக்கள் மன்றம்“ தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். எந்த ஒரு சமுதாயமும் வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் அந்த சமுதாயத்தில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இருக்க வேண்டும். அதனால்தான், சமூகப் பாதுகாப்பை உறுதி செய்து சமுதாயத்தில் அமைதியை ஏற்படுத்த வேண்டியது அரசின் கடமையாக இருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு, சமூக அமைதி, சமூக சேவை, சமூக நீதி ஆகிய மூன்றையும் காவல்துறையின் தாரக மந்திரமாக முன்வைக்கிறது. சமுதாயத்தில் அமைதியை நிலைநாட்ட காவல்துறையில் பல நவீன மாற்றங்களை, புதிய திட்டங்களை, புதிய சட்ட திருத்தங்களை கொண்டு வருகிறது. அதற்காக 2025-26 பட்ஜெட்டில் சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய், மொத்த பட்ஜெட்டில் 12% உ்ள்நாட்டு பாதுகாப்புக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.

publive-image

Advertisment
Advertisements

மக்கள் மன்றம் என்ற இந்த ஒரு செயல் திட்டத்தின் மூலமாக புதுச்சேரி காவல்துறை ஒரு வரலாற்று மைல் கல்லை எட்டிருக்கிறது என்று நம்புகிறேன். இந்த திட்டத்தின் மூலமாக, சமூக பாதுகாப்பும், சமூக நீதியும், அரசின் மீதான மக்களின் நம்பிக்கையும் உறுதி செய்யப்படும். பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் நடைமுறை ஏற்கனவே இருந்து வருகிறது என்றாலும், அதில் பொது மக்களுக்கு ஒரு வித சிரமம் இருந்தது. பொதுமக்கள் குறை கேட்கும் நிகழ்ச்சி ஒரு குறிப்பிட்ட இடத்தில் நடைபெறும்.

மக்கள் அனைவரும் எளிதில் அணுகக் கூடியதாக இருக்கவில்லை. ஆனால் இன்று தொடங்கப்படும் மக்கள் மன்றம் அந்தந்த பகுதி காவல் நிலையத்தில் சுழற்சி முறையில் நடத்தப்படும் என்பதால் பொதுமக்கள் எளிதாக காவல்துறை அதிகாரிகளை அணுகி தங்கள் குறைகளை, புகார்களை சொல்லி அதற்கு தீர்வு காண முடியும். பொதுவாக, இந்த திட்டம் பொதுமக்களுக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் இடையே ஒரு இணைப்பை வலுப்படுத்தக் கூடியதாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்த புதிய அணுகுமுறை, காவல்துறையின் நிர்வாகச் செயல்பாடுகளில் ஒரு வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்தும்.

காவல்துறையின் மீது பொதுமக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை அதிகப்படுத்தும்.  நான் புதுச்சேரி மாநிலத்தின் துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்ற பிறகு,  மக்கள் தங்கள் குறைகளைச் சொல்லி அனுப்பும் கடிதம் அதிக அளவில் வருவதைப் பாரத்தேன். அவற்றுக்கு தீர்வு காணும் நடைமுறையை விரைவுபடுத்த வேண்டும் என்பதற்காக தனியாக ஒரு மக்கள் குறைதீர்ப்பு பிரிவு ஒன்றை ஏற்படுத்தினேன். அதுமட்டும் அல்லாமல் ஆளுநர் மாளிகையின் இரண்டு வாசல்களிலும் பொதுமக்கள் தங்கள் குறைகளைச் சொல்ல புகார் பெட்டி வைக்கப்பட்டு இருக்கிறது.

publive-image

அந்த இரண்டு புகார் பெட்டிகளும் என்னுடைய நேரடி பார்வையில் இருக்கிறது என்பதை நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். அதில் போடப்படும் கடிதங்களுக்கும் தீர்வு காணப்பட்டு வருகிறது. இதை இங்கே குறிப்பிட்டு சொல்வதற்கு காரணம் என்ன என்றால், பொதுமக்களின் குறைகளை தீர்ப்பதற்கு அதிகாரிகள் எடுக்கும் நடவடிக்கை அரசு மீதான பொதுமக்களின் நம்பிக்கையை அதிகரிக்கும். பாதுகாப்பான சமுதாயம் உருவாக வழி வகுக்கும்.

இங்கே அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதுச்சேரி காவல் துறையின் மற்றொரு முயற்சியையும் நான் மனதார பாராட்டுகிறேன். குழந்தைகளின் பாதுகாப்பை, நல்வாழ்வை உறுதி செய்வதற்காக பள்ளிகளில் புகார் பெட்டிகள் COMPLAINT BOX-களை நிறுவ காவல்துறை நடவடிக்கை எடுத்து இருக்கிறது. அண்மை காலமாக, தொலைக்காட்சி பெட்டியை திறந்தாலும் மற்ற செய்தி ஊடகங்கள் வழியாகவும் நாம் பார்க்கும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள், ஒட்டு மொத்தமான மனித சமுதாயத்திற்கும் பெரும் கவலை அளிப்பதாக இருக்கிறது.

குழந்தைகள் கல்வி கற்கும் சூழல் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். அப்படி இல்லாத சூழலில் குழந்தைகள் தங்கள் குறைகளை பயம் இல்லாமல், தயக்கம் இல்லாமல் சொல்வதற்கு இந்த திட்டம் மிகவும் உதவியாக இருக்கும். குழந்தைகளின் புகார்களுக்கு முறையாக தீர்வு காணும் சூழ்நிலையை நாம் ஏற்படுத்த வேண்டும். இன்று ஒரு சில பள்ளிகளில் செயல் படுத்தப்படும் இந்த திட்டம் விரைவில் அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று நம்புகிறேன்.

Puduch Governor

நான் பொதுமக்களை கேட்டு கொள்வதெல்லாம், புதுச்சேரி காவல்துறையின் இந்த பாதுகாப்பு திட்டங்களை அனைவரும் பயன்படுத்திக் கொண்டு, குறைகளுக்கு தீர்வு காண முயற்சி செய்ய வேண்டும். குழந்தைகள் அவர்களது மனதில் உள்ள குறைகளை தயக்கம் இல்லாமல் வெளிப்படுத்த பெற்றோர்கள் அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இந்த திட்டங்களை முறையாக பயன்படுத்திக் கொண்டால் மிகப் பெரிய சமுதாய மாற்றத்தை நாம் ஏற்படுத்த முடியும்.

நாம் அனைவரும் ஒன்று இணைந்து செயல்பட்டால் ஒரு பாதுகாப்பான சமுதாயத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையோடு, இங்கே பாராட்டுகள் பெற்ற சிறப்பு காவலர்கள் மற்றும் ISO காவல் நிலையங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார்.

Puduchery

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: