புதுச்சேரியில் 9 ஐஏஎஸ் அதிகாரிகள் பொறுப்புகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. காரைக்கால் ஆட்சியராக இருந்த மணிகண்டன் ஆளுநரின் தனிச்செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உத்தரவுப்படி ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடங்கள் மாற்றி அமைக்கப்பட்டு அரசாணையில் வெளியிடப்பட்ட விவரம்:
புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் ஆணையர் ஜவஹருக்கு தொழில்துறை மேம்பாடு, வர்த்தகம், வணிகம், வனத்துறை, கல்வி மற்றும் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஐஏஎஸ் அதிகாரி முத்தம்மாவுக்கு கடந்த ஜனவரி 1ம் தேதி பதவி உயர்வு தரப்பட்டுள்ளது. அத்துடன் திட்டம் மற்றும் ஆராய்ச்சி, போக்குவரத்து, மின்துறை , குடிமைப்பொருள் வழங்கல் துறை, பொதுப்பணித்துறை, தகவல் தொழில்நுட்பம், ஆதிதிராவிடர் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் ஆட்சியர் மணிக்கண்டன் அப்பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டு ஆளுநரின் தனிச்செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சுற்றுலா, மீன்வளத்துறை செயலர் பொறுப்பும் கூடுதலாக தரப்பட்டுள்ளது. ஐஏஎஸ் அதிகாரி சுந்தரேசன் கடந்த 4.10.2024ல் புதுச்சேரிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு தற்போது சமூக நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறை பொருளாதாரம் புள்ளியியல் துறை விளையாட்டுத்துறை மற்றும் பான்கேர் தலைவர் பொறுப்பு தரப்பட்டுள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/02/03/HlD9WgbzTwKFotWONKpH.jpg)
ஐஏஎஸ்அதிகாரி ஜெயந்த் குமார் ரேவுக்கு சுகாதாரத்துறை, தொழிலாளர் நலத்துறை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, ஸ்மார்ட் சிட்டி தலைமை செயல் அதிகாரி பதவி தரப்பட்டுள்ளது. ஐஏஎஸ் அதிகாரி நெடு்ஞ்செழியனுக்கு விவசாயத்துறை, கால்நடைத்துறை இந்து அறநிலையத்துறை வக்ப் போர்டு, கலை மற்றும் கலாச்சார துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஐஏஎஸ் அதிகாரி கேசவனுக்கு பொது நிர்வாகம் பணியாளர் துறை, நகர திட்டமிடல், வீட்டு வசதி, உள்ளாட்சித்துறை விஜிலென்ஸ், தீயணைப்புத்துறை செய்தி விளம்பரத்துறை மற்றும் உள்துறை சிறப்பு செயலர் பொறுப்புகள் தரப்பட்டுள்ளன.
மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கனுக்கு கூடுதலாக ஊரக வளர்ச்சித்துறை, டிஆர்டிஏ தலைவர், வருவாய்த்துறை சிறப்பு செயலர் பொறுப்புகள் தரப்பட்டுள்ளன. ஐஏஎஸ் அதிகாரி சோமசேகர் அப்பாராவ் காரைக்கால் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி