புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கடந்தாண்டு ரூ.12,700 கோடி ரூபாய்க்கு பட்ஜெட்டினை தாக்கல் செய்தார். அடுத்த பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான பணிகளையும் புதுச்சேரி அரசு முடுக்கிவிட்டுள்ளது. பட்ஜெட் ரூ.12,700 கோடிக்கு தாக்கல் செய்யப்பட்டாலும், திருத்திய பட்ஜெட்டில் அரசின் செலவினம் உயர்ந்ததால் மாநில அரசின் பட்ஜெட்டும் ரூ.13,235 கோடியாக உயர்ந்தது.
எனவே, நடப்பாண்டு பட்ஜெட் இறுதி கட்டத்தை எட்டியுள்ள சூழ்நிலையில், மாநில வருவாய் ரூ. 7,374 கோடியாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏற்ப கடந்த மாதம் வரை ரூ.5,249 கோடி ரூபாய் வருவாய் சொந்த நிதி ஆதாரங்களில் இருந்து ஈட்டியுள்ளது. குறிப்பாக, வணிக வரியில் ரூ.1,755 கோடி, கலால் வரியில்-ரூ.1,185 கோடி, போக்குவரத்து துறையில்-137 கோடி, பதிவு துறையில்-75 கோடி, வரி இல்லாத ரசீதுகளாக ரூ.2,093 கோடி என மொத்தம் 5,249 கோடி ஈட்டியுள்ளது.
பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை கடந்த மாதம் உயர்த்தியதை தொடர்ந்து அரசுக்கு 500 கோடி ரூபாய்க்கு கூடுதல் வருமானம் கிடைக்கிறது.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.