புதுச்சேரியில் விமான விமான நிலையத்தை விரிவுப்படுத்த அரசு முயற்சி எடுத்து வருவதாகவும். இன்னும் 5 ஆண்டுகளில் மருத்துவ சேவை மையமாக புதுச்சேரி வளரும் எனவும் கவர்னர் கைலாஷ்நாதன் கூறினார்.
புதுச்சேரி பிள்ளையார் குப்பத்தில் உள்ள மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரியில் 3வது சர்வதேச சுகாதாரம் மற்றும் ஆராய்ச்சி மாநாட்டை கவர்னர் கைலாஷ்நாதன் விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
/indian-express-tamil/media/post_attachments/56eb3e01-4e8.jpg)
பின்னர் கவர்னர் பேசியதாவது, “மருத்துவ சேவையின் எல்லைகள் நாளுக்கு நாள் விரிந்துக்கொண்டே போகிறது. தொற்று நோய்கள் முதல் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் வரை உலகம் தொடர்ச்சியாக மருத்துவ சவால்களை எதிர்கொண்டு வருகிறது.
புதிய புதிய கண்டுபிடிப்புகளும் வந்து கொண்டே இருக்கிறது. மருத்துவச் சேவையில் புதுமை என்பது மருந்துகள் அல்லது அதிநவீன தொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பது மட்டுமே சாமானிய ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் அது கிடைக்கக் கூடியதாக இருக்கும். குறைந்த செலவில் அனைவருக்கும் பயன் தருவதாக அதை மாற்ற சாமானிய ஏழை, எளிய மக்கள் அனைவருக்கும் மருத்துவ சேவை கிடைக்கக் வேண்டும்.
/indian-express-tamil/media/post_attachments/d374f90b-8bc.jpg)
அதாவது மருத்துவச் சேவை ஒவ்வொரு குடிமகனையும் சென்றடைவதை உறுதிசெய்ய வேண்டும். கண்டுபிடிப்புகள் மட்டும் போதாது. அனைத்து சமூகத்தினரும், சமூக-பொருளாதார பின்னணியில் உள்ள மக்களும் இந்த கண்டுபிடிப்புகளால் முன்னேற்றம் அடைய வேண்டும்.
மருத்துவத் துறையில் ஏற்படும் வளர்ச்சி இதை உறுதி செய்ய வேண்டும். நாம் அதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். உலகம் சந்திக்கும் பல மருத்துவச் சவால்களை சந்திக்க இத்தகைய ஒத்துழைப்பு முக்கியமானது. எந்தவொரு தனி நிறுவனமோ, நாடோ அல்லது துறையோ இந்த சவால்களுக்கு தீர்வு சொல்ல முடியாது.
மருத்துவ அறிஞர்கள், வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பன்முகத்தன்மை கொண்ட அணுகுமுறையை உருவாக்க வேண்டும். கொரோனா தொற்று மருத்துவ சேவையின் போக்கை மாற்றி அமைத்திருக்கிறது. அதற்கு புதிய பரிமாணத்தை வழங்கியுள்ளது.
மருத்துவப் பணியாளர்கள் முன்னணியில் இருந்து உலகத்தை வழிநடத்த வேண்டும் என்பது கடந்து, மருத்துவக் கண்டுபிடிப்புகள் அனைவருக்கும் பயன்படுவதை நாம் உறுதிசெய்ய வேண்டும். இந்த இடைவெளிகளை குறைக்க நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். நாம் மருத்துவத் துறையில் முன்னேற்றம் அடையும்போது அது அனைவருக்கும் கிடைக்கக்கூடிய வகையில், இருக்கும் வகையில் நம்முடைய முயற்சிகளை ஒருங்கிணைப்பது அவசியம். அந்த தொலைநோக்குப் பார்வையோடு பிரதமர் நரேந்திர மோடி பல மருத்துவத் திட்டங்களை அறிமுகப்படுத்தி, செயல்படுத்தி வருகிறார்.
/indian-express-tamil/media/post_attachments/50e6c204-146.jpg)
புதுச்சேரி ஒரு சிறிய மாநிலம் என்றாலும் இங்கு ஜிப்மர் உள்ளிட்ட 9 மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. இவற்றை நாம் சரியாக பயன்படுத்தி, புதுச்சேரி மாநிலத்தை ஒரு மருத்துவ மையமாக (மெடிக்கல் ஹப்) உருவாக்க முடியும்.
தற்போது விமான நிலையத்தை விரிவுபடுத்த அரசு முயற்சி எடுத்து வருகிறது. அதன் பிறகு இன்னும் சுமார் 5 ஆண்டுகளில் புதுச்சேரி ஒரு மருத்துவ சேவை மையமாக வளரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.” இவ்வாறு கவர்னர் கூறினார்.