/indian-express-tamil/media/media_files/2025/06/28/pondy-mlas-2025-06-28-17-42-50.jpg)
புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் வர இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், புதுச்சேரி பா.ஜ.க.வில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நடந்து வருகிறது. நேற்று பா.ஜ.வை சேர்ந்த 3 நியமனம் எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அவர்களுக்கு பதிலாக புதிய நியமன எம்.எல்.ஏக்களாக 3 பேர் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். அதேபோல் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் சாய்.ஜெ. சரவணன்குமார் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
புதுச்சேரி சட்டசபைக்கு நேரடியாக 3 எம்.எல்.ஏ.க்களை மத்திய அரசு நியமிக்க முடியும். கடந்த காலங்களில் மத்திய அரசு மாநில அரசின் பரிந்துரையை ஏற்று 3 எம்.எல்.ஏக்களை நியமித்தனர். இந்நிலையில், கடத்த காங்கிரஸ் ஆட்சியில் மாநில அரசு பரிந்துரையின்றி மத்திய அரசு நேரடியாக பா.ஜ.க.-வை சேர்ந்த 3 பேரை எம்.எல்.ஏ.க்களாக நியமித்திருந்தது. அவர்களுக்கு ஆளுநர் கிரண்பேடி பதவிப்பிரமாணம் செய்து
வைத்தார். அவர்கள் பெரும் சட்ட போராட்டம் நடத்தி சட்டசபைக்குள் நுழைந்தனர்.
கடந்த 2021-ல் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசு அமைந்த போதும் மத்திய அரசு நேரடியாக 3 பேரை எம்.எல்.ஏ.க்களாக நியமித்தது. பா.ஜ.க-வை சேர்ந்த வெங்கடேசன், ராமலிங்கம், அசோக்பாபு ஆகியோர் எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கப்பட்டனர். இவர்களை நியமிக்கும் போது, 2 ஆண்டுகளுக்கு பிறகு கட்சியைச் சேர்த்த வேறு 3 பேருக்கு பதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், 4 ஆண்டாக அவர்கள் நியமன எம்.எல்.ஏ.க்களாக தொடர்ந்தனர்.
தற்போது சட்டசபை தேர்தலை சந்திக்க பா.ஜனதா தயாராகி வருகிறது. இதற்காக 3 நியமன எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்யகட்சித் தலைமை அறிவுறுத்தியது. இதையேற்று எம்.எல்.ஏ.க்ள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். மத்திய உள்துறைக்கு பரிந்துரை 3 பேர்
புதிதாக 3 எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கப்பட உள்ளனர்.
பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தாள். முதலியார்பேட்டை செல்வம், காரைக்காலைச் சேர்ந்த ராஜசேகர் ஆகியோரின் பெயர்கள் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கவர்னர் மூலம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஒப்புதல் கிடைத்தவுடன் 3 பேர் எம்.
எல்.ஏக்களாக பதவியேற்க உள்ளனர்.
இதற்கிடையே, கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ், பாஜனதா. அதி.மு.க. கூட்டணியில், பாஜக போட்டியிட்டது. போட்டியிட்ட தொகுதியில் 6 தொகுதிகளை பா.ஜ.க கைப்பற்றியது. என்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா இணைந்து முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் கூட்டணி ஆட்சியை அமைத்தனர். பாஜக எம்.எல்.ஏ.க்களில் ஜான்குமாரும், அவரின் மகன் ரிச்சர்டும் வெற்றி பெற்றிருந்தனர். ஒரே குடும்பத்தில் 2 எம்.எல்.ஏக்கள் இருப்பதால் தங்களுக்கு அமைச்சர் பதவி வேண்டும்என தலைமையிடம் ஜான்குமார் கட்சி வலியுறுத்தினார். ஆனால், அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. அமைச்சர் பதவி கிடைக்காததால் ஜான்குமார் ஆதரவாளர்கள், பா.ஜனதா தலைமை அலுவலகம் முன்பு போராட்டமும் நடத்தினர். ராஜினாமா தலைமை சுழற்சி முறையில் இதையடுத்து கட்சி தலைமை அமைச்சர் பதவி தருவதாக ஜான்குமாருக்கு வாக்குறுதி அளித்தது.
பாராளுமன்றத் தேர்தல் குறுக்கிட்டதால் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கவில்லை. மேலிட பார்வையாளர் நிர்மல்குமார் சுரானாவிடம்
அமைச்சர் பதவி கேட்டு ஜான்குமார் வலியுறுத்தி வந்தார். இதையடுத்து அவர் கட்சித் தலைமையின் ஒப்புதல் பெற்றார். இதனடிப்படையில் அமைச்சராக இருந்த சாய் ஜெ சரவணன்குமார் ராஜினாமா செய்தார்.
புதிய அமைச்சராக ஜான்குமார் நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது. இதுகுறித்து ஜான்குமார் கூறியதாவது: அமைச்சர் பதிவி வழங்கினால் சந்தோஷம். கடந்த முறையே அமைச்சர் பதவி தருவதாக கூறினர். அதன்படி ஒரு ஆண்டு பொறுமையாக இருக்கும்படி கட்சித் தலைமை அறிவுறுத்தியதை நான் ஏற்று காத்திருந்த முயற்சிக்கு வெற்றி கிடைத்தது. அமைச்சர் பதவி கிடைக்கும் என நம்பிக்கையுடன் இருந்தேன்.
பிரதமர் மோடியை நேசித்து பா.ஜ.க-வுக்கு வந்தோம். அமைச்சர் பதவி கிடைக்கும் என்பதற்காக பாஜனதாவுக்கு வரவில்லை. உலகளவில் இந்தியாவை, வளர்ந்த நாடாக ஆக்குவது பிரதமர் மோடி செயல்பாடுகள்தான் காரணம். கட்சி மேலிடம் கூறும்போதுஅமைச்சராக பதவியேற்பேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.