கொள்கை முரண்பாடுகள் இருந்தாலும் சுதந்திர தின விழா போன்றவற்றில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்
புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் 76 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தேசிய கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி சுதந்திர தின விழா சிறப்புரை ஆற்றினார்.
இதையும் படியுங்கள்: புதுச்சேரி சுதந்திர தினவிழா; பல மாநிலக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளால் பொதுமக்கள் உற்சாகம்
விழாவில் பேசிய கவர்னர், கொள்கை முரண்பாடுகள் இருந்தாலும் சுதந்திர தின விழா போன்றவற்றில் அனைவரும் பங்கேற்க வேண்டும். கவர்னர் விருந்து என்பது அலட்சியம் செய்யும் விழா இல்லை. மத்திய அரசின் வழிபாட்டுதலின்படி சுதந்திர போராட்ட வீரர்கள், பத்ம ஸ்ரீ விருது பெற்றவர்கள், மாற்றுதிறனாளிகள் என பலரும் இங்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இங்கு வந்தால் அவர்கள் எல்லோரையும் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். கலந்து கொள்ளாததால் அவர்களுக்கு தான் நஷ்டம். அன்போடு அழைத்ததன் பேரில் வந்தவர்களுக்கு வாழ்த்து. பிரச்னைகளை பேசி தீர்த்து கொள்வோம். இளைஞர்களுக்கு நல்ல செய்தியை சொல்வோம். இவ்வாறு அவர் உரையாற்றினார்.
பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil