பிறப்பு மற்றும் இறப்பு பதிவு செய்ய ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது என புதுச்சேரி உழவர்கரை நகராட்சி அறிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்: ரூ93 கோடி செலவில் புதுச்சேரி ரயில் நிலைய சீரமைப்பு பணி; 2 ஆண்டுகளில் முடிக்க திட்டம்
இதுகுறித்து, உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் விடுத்துள்ள செய்திகுறிப்பில், புதுச்சேரி மாநில தலைமை பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர் உத்தரவுப்படி, பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகளின் போது ஆதார் எண் அவசியம் ஆகிறது. பிறப்பு பதிவிற்கு பெற்றோர்களின் ஆதார் எண் விபரம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இறப்பு பதிவிற்கு இறந்த நபரின் ஆதார் எண் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
எனவே, பொதுமக்கள் தகுந்த ஆதார் விபரங்களை அளித்து பிறப்பு மற்றும் இறப்பு பதிவு நடைமுறைகளை தங்கு தடையின்றி நடைபெற ஒத்துழைக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil