சம்பளம் கேட்டு பினாயில் குடித்த அமுத சுரபி ஊழியர்கள்: புதுவை ஷாக்
நிலுவை சம்பளம் கேட்டு போராட்டம் நடத்திய புதுச்சேரி அமுதசுரபி ஊழியர்கள் பினாயில் குடித்தனர். தற்போது அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நிலுவை சம்பளம் கேட்டு போராட்டம் நடத்திய புதுச்சேரி அமுதசுரபி ஊழியர்கள் பினாயில் குடித்தனர். தற்போது அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி அரசின் கூட்டுறவு நிறுவனமான அமுதசுரபி நலிவடைந்துள்ளது. இதனால் அமுதசுரபியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கடந்த 30 மாதத்துக்கும் மேலாக சம்பளம் வழங்கவில்லை. நிலுவை சம்பளம், பணி பாதுகாப்பு வழங்கக் கோரிஅமுதசுரபி ஊழியர்கள் சங்கத்தினர் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். காந்திவீதியில் உள்ள அமுதசுரபி தலைமை அலுவலகம் மீது ஏறி நின்று தற்கொலை மிரட்டல் போராட்டம் விடுத்தனர்.
இந்த நிலையில் இன்று காந்தி வீதி தலைமை அலுவலக நுழைவு வாயில் முன்பு இன்று தர்ணா போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களில் அய்யனார், ஆறுமுகம், சிவஞானம், மணிமாறன் ஆகிய 4 பேர் அமுதசுரபியில் விற்பனைக்கு வைத்திருந்த பினாயிலை குடித்தனர். அப்போது அங்கு இருந்த போலீசார் தடுக்க முயன்றனர். இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பு ஏற்பட்டது.
Advertisment
Advertisements
இதனை மீறி ஊழியர்கள் குடித்தனர். இதில் அய்யனார் மயங்கி விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. போலீசார் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். பினாயில் குடித்த 4 பேரும் ஆம்புலன்சில் ஏற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil