புதுச்சேரி மாநிலத்தில் 25 எலெக்ட்ரிக் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இந்த மின்சார பஸ்களுக்கு தேவையான சார்ஜ் ஸ்டேஷன் உள்கட்டமைப்பினை ஏற்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
சார்ஜ் ஸ்டேஷன்களை அமைப்பதற்கான நோடல் துறையாக புதுச்சேரி மின் துறை தேர்வு செய்யப்பட்டுள்ள சூழ்நிலையில், 1.5 கோடி ரூபாய் திட்டத்துடன் களம் இறங்கியுள்ளது. தாவரவியல் பூங்கா எதிரே உள்ள இடத்தில் இந்த சார்ஜ் ஸ்டேஷன் அமைய உள்ளது.
இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், 'புதுச்சேரி நகர பகுதியில் பொதுபோக்குவரத்தினை அதிகரிக்கும் வகையில் 25 எலெக்டரிக் பஸ்கள் விரைவில் இயக்கப்பட உள்ளது.
இதற்கான கொள்முதல் ஒப்பந்தம் ஓரிரு தினங்களில் வழங்கப்பட்டு விடும். அதன் பிறகு ஒரு எலெக்டரிக் பஸ் மட்டும் சோதனை ஓட்டமாக இயக்கப்படும்.இரண்டாம் கட்டமாக 15 எலெக்டரிக் பஸ்களும், மூன்றாம் கட்டமாக 10 எலெக்டரிக் பஸ்களும் இயக்கப்படும்.
அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் எலெக்ட்ரிக் பஸ்கள் அனைத்தும் முழுமையாக இயக்கப்பட்டு விடும் என்றனர்.
செய்தி: பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“