/indian-express-tamil/media/media_files/2025/10/28/puducherry-health-officials-arrest-2025-10-28-21-37-48.jpg)
புதுச்சேரி சுகாதார துறையில் தரமற்ற மருந்துகள் மற்றும் உபகரணங்கள் வாங்கி பொதுமக்களுக்கு விநியோகம் செய்து மேலும் அரசுக்கு ரூ 2 கோடிக்குமேல் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக புகார்.
புதுச்சேரி சுகாதார துறையில் தரமற்ற மருந்துகள் மற்றும் உபகரணங்கள் வாங்கி பொதுமக்களுக்கு விநியோகம் செய்து மேலும் அரசுக்கு ரூ 2 கோடிக்குமேல் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக எழுந்த புகாரின் அடிப்படியிலும், மேலும் மருந்துகள் மற்றும் உபகரணங்கள் வாங்கும்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை கடைபிடிக்காமல் தரமற்ற மருந்துகளை பொதுமக்களுக்கு விநியோகம் செய்தது சம்பந்தமாக சுகாதார துறையின் ஓ.எஸ்.டி மேரி ஜோஸ்பின் சித்ரா கொடுத்த புகாரின் அடிப்படையில் கடந்த 08.09.2023 அன்று புதுச்சேரி லஞ்ச ஒழிப்பு பிரிவில் வழக்கு பதியப்பட்டது.
முதற்கட்டமாக இந்த வழக்கில் மருந்தாளர் நடராஜன் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த நிலையில், பத்மஜோதி ஏஜன்சி மற்றும் ஸ்ரீ சாய்ராம் ஏஜன்சி என்ற பெயரில் தரமற்ற மருந்துகள் விநியோகம் செய்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய காரணத்திற்காக அந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் மற்றும் பங்கு தாரர்கள் மற்றும்தேசிய கிராமப்புற சுகாதாரத் திட்டம், (NRHM), புதுச்சேரி நிதியை கவனக்குறைவாக கையாடல் செய்த குற்றத்திற்காக அந்த திட்டத்தில் இருந்த குழுவினர் அனைவரும் வழக்கில் சேர்க்கப்பட்டனர்.
இந்த நிலையில், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய தலைமை கண்காணிப்பு அதிகாரி (CVO) டாக்டர் சரத் சவுகான், உத்தரவின் பேரில் ஈஷாசிங், முதுநிலை காவல் கண்காணிப்பாளர் (Vigilance) நல்லாம் கிருஷ்ணராயபாபு, காவல் கண்காணிப்பாளர் (லஞ்சஒழிப்பு) ஆகியோரின் வழி காட்டுதலின் பேரில், விசாரணை அதிகாரி வெங்கடாசலபதி தமைமையில் தனிப்படை அமைத்து, சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் பத்மஜோதி ஏஜன்சி உரிமையாளர் மோகன், ஸ்ரீ சாய்ராம் ஏஜன்சி பங்குதாரர் புனிதா, ஸ்ரீ சாய்ராம் ஏஜன்சி பங்குதாரர் நந்தகுமார், முன்னாள் புரோகிராம் மேலாளர் அல்லிராணி, முன்னாள் மிஷன் இயக்குநர் மோகன்குமார், மற்றும் முன்னாள் இயக்குநர் (சுகாதாரம்) கே.வி. ராமன், ஆகிய போரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இது குறித்து பெற்றோர் நல சங்க தலைவர் பாலா கூறுகையில் லஞ்ச ஒழிப்பு வார விழா நடந்து கொண்டிருக்கும் நேரத்தில், தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை அரசு அதிகாரிகளை கைது செய்திருப்பது வரவேற்கத்தக்கது. உடனடியாக அரசுக்கு வரவேண்டிய தொகையை வசூல் செய்ய வேண்டும். அப்படி இல்லை என்றால், அவர்களுடைய சொத்துக்களை பரியும் முதல் செய்ய வேண்டும். மேலும், பத்திர பதிவுத்துறை வட்டாரப் போக்குவரத்து துறை கல்வித்துறை என்ன ஊழலை அடுக்கிக்கொண்டே போகலாம் இவ்வாறாக தெரிவித்தார்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us