/indian-express-tamil/media/media_files/2025/06/19/puducherry-history-professor-ramanujam-new-book-launch-tamil-news-2025-06-19-20-51-02.jpg)
புதுச்சேரி அரிக்கமேட்டின் தொல்லியல் மேன்மை, 1674 ஆம் ஆண்டு தொடங்கி 1945 வரையிலான புதுச்சேரியின் வரலாற்று பேராசிரியர் இராமானுஜம் எழுதிய பிரெஞ்சிந்திய விடுதலைப் போராட்டம் - பாதையும் பயணமும் நூலை அமைச்சர் லட்சுமி நாராயணன் வெளியிட்டார்
புதுச்சேரி அரிக்கமேட்டின் தொல்லியல் மேன்மை, 1674 ஆம் ஆண்டு தொடங்கி 1945 வரையிலான புதுச்சேரியின் வரலாறு பற்றி பேராசிரியர் இராமானுஜம் இதுவரையில் மூன்று நூல்களை எழுதியுள்ளார். அதன் தொடர்ச்சியாக “பிரெஞ்சிந்திய விடுதலைப் போராட்டம் - பாதையும் பயணமும்”என்ற நூலை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
இந்த நூலை புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தில் நடந்த விழாவில் பொதுப்பணித்துறை அமைச்சர் க. லட்சுமி நாராயணன் அறிமுகம் செய்தார். மருத்துவர் நல்லாம் நூலைப் பெற்றுக் கொண்டு வாழ்த்துரை வழங்கினார். தொழிலதிபர் சிவராம் ஆல்வா பாராட்டி வாழ்த்தினார். கல்வித் துறையின் முன்னாள் இணை இயக்குனர் முனைவர் இராமதாசு நூல் பற்றிய ஆய்வுரை வழங்கினார்.
இந்த விழாவிற்கு வந்தவர்களை முன்னாள் வழக்கறிஞர் சங்கத் தலைவர் குமரன் வரவேற்றார். நகர கூட்டுறவு வங்கி உதவி மேலாளர் பிரபாகர் நன்றியுரை கூறினார். நூலாசிரியர் இராமானுஜம் ஏற்புரை வழங்கினார். இந்த விழா நிகழ்ச்சிகளை புதுவை அருங்காட்சியகம் அமைப்பாளர் அறிவன் அருளி சிறப்பாகத் தொகுத்து வழங்கினார். ஃபிரஞ்சு நிறுவனத்தைச் சார்ந்த வெங்கடகிருஷ்ணன், அந்தோணி ஆகியோர் விழாவுக்கான ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்திருந்தனர்.
மேலும், இந்த விழாவில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாலாஜி, இளங்கோ, கல்வெட்டு ஆய்வாளர் ந. வெங்கடேசன், பேராசிரியர்கள் ராஜ்குமார் வேலாயுதம், ஆரோக்கியநாதன், ராஜ்ஜா, சம்பத், சீனு தமிழ்மணி, சிவ.இளங்கோ, தன்னுரிமைக் கழகம் சடகோபன், சீனு. தமிழ்மணி, உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.