/indian-express-tamil/media/media_files/2025/02/13/qZnvE6Ttz4vRngdn7Abv.jpg)
புதுச்சேரி மாநிலத்தில் வருவாயைப் பெருக்குவதற்காகவே புதிய மதுபானக் கொள்கை முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்று அமைச்சா் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்
புதுச்சேரி சட்டப்பேரவையில் அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளா்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர், "புதுக்குப்பம் அரசுப் பள்ளியில் குடிநீா் தொட்டி சுவா் இடிந்து விழுந்து 3 மாணவா்கள் காயமடைந்தது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.மாநிலப் பாடத் திட்டத்தில் தோ்வு பயம் இருந்தது. ஆனால், தற்போது சிபிஎஸ்இ பாடத் திட்டத்தால் அந்த பயம் போக்கப்பட்டுள்ளது.
எந்த பாடத் திட்டமானாலும் முழுமையாகப் படிக்க வேண்டும். சி.பி.எஸ்.இ பாடத் திட்டத்தில் முன்மாதிரி தோ்வில் 80 சதவீத தோ்ச்சி இருந்துள்ளது. மின் கட்டண உயா்வை மாநில அரசு முடிவு செய்வதில்லை. தமிழகம், புதுவையில் இணை ஒழுங்கு முறை ஆணையம் தான் மின் கட்டண உயா்வை தீா்மானிக்கிறது.
புதுவையில் மின் கட்டண மானியம் வழங்கப்பட்டு வருகிறது. மின் கட்டண குறைபாடுகள் குறித்து அதிகாரிகளுடன் பேசி விளக்கமளிக்கப்படும். பா.ஜ.க தலைமையின் முடிவுக்கு கட்டுப்படுவோம். முன்னாள் முதல்வா் நாராயணசாமி ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை கூறுவது சரியல்ல. வீட்டு வரி உயா்வு போன்றவற்றை தவிா்க்கவும், மாநில வருவாயைப் பெருக்கவும் புதிய மதுபானக் கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது.
இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.