Advertisment

செல்போன்களை திருடிய ஓட்டல் சர்வர்… வளைத்து பிடித்த புதுவை போலீசார்

செல்போனை திருடியது ஓட்டலில் சர்வராக வேலை செய்து வரும் புதுச்சேரி நெல்லித்தோப்பை சேர்ந்த கிருஷ்ணகுமார் (29) என்பவர் தான் என்று கண்டுபிடிக்கப்பட்டது.

author-image
WebDesk
Aug 02, 2023 18:44 IST
New Update
Puducherry: hotel Waiter steal smartphones, police arrested Tamil News

ஓட்டலில் சர்வராக வேலை செய்தவரிடமிருந்து ரூ. 75 ஆயிரம் மதிப்புள்ள 9 செல்போன்களை புதுச்சேரி போலீசார் கைப்பற்றினர்.

பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி

Advertisment

புதுச்சேரி பஸ் நிலையத்தில் உள்ள ஓட்டல் சர்வரிடம் இருந்து ஒன்பது செல்போன்களை கைப்பற்றிய புதுவை போலீசார் அவரை கைது செய்தனர் .

இதுபற்றி புதுச்சேரி உருளையான்பேட்டை ஆய்வாளர் பாபுஜி கூறியதாவது:-

நேற்று செவ்வாய்கிழமை (ஆக.1ந் தேதி) பஸ் ஸ்டாண்ட்டில் தவளகுப்பம், கல்லூரியில் பி.பி.ஏ. மூன்றாமாண்டு படித்து வரும் விநாயகம் (21) த/பெ அமிர்தலிங்கம், நெ. 10, கங்கையம்மன் கோவில் தெரு, அபிஷேகபாக்கம், புதுச்சேரி என்பவர் காலை சுமார் 04.15 மணியளவில் தனது செல்போனை யாரோ திருடிக்கொண்டு சென்றுவிட்டதாக புகார் கொடுத்தார்.

புகாரில் பேரில் உருளையபேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, உதவி ஆய்வாளர் ஆர். சந்திரசேகரன், தலைமை காவலர் வெங்கடேஷன் மற்றும் குற்ற பிரிவு காவலர்கள் பிரேம்குமார், சத்தியவேல் ஆகியோர் துரித விசாரணையில், மேற்படி செல்போனை திருடியது ஓட்டலில் சர்வராக கிருஷ்ணகுமார் (29) த/பெ தங்கராஜ், நெ.15, மார்கட் வீதி, நெல்லித்தோப்பு, புதுச்சேரி என்று தெரியவந்தது.

அவரை கைது செய்து விசாரித்ததில் அவர் இதுபோல் பல செல்போன்களை திருடி மறைத்து வைத்திருந்ததது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவரிடமிருந்து ரூபாய் 75,000/- மதிப்புள்ள சுமார் 9 செல்போன்களை கைப்பற்றப்பட்டது. அவரை காலாபட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்டு சம்பந்தப்பட்ட எதிரியை கைது செய்த உருளையன்பேட் போலீஸாரை புதுச்சேரி எஸ்.எஸ்.பி (சட்டம் & ஒழுங்கு) நாரா சைத்தன்யா எஸ்.பி (கிழக்கு) ஸ்வாதி சிங் பாராட்டினார்கள்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

#Puducherry #Police
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment