கடற்கரை சாலையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் முதல்வர் ரங்கசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
நாட்டின் 76-வது சுதந்திர தின விழா புதுச்சேரி கடற்கரைச் சாலை, காந்தி சிலை முன்பு வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தேசியக் கொடியேற்றி வைத்து காவலர்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
இதையும் படியுங்கள்: புதுவை ஆளுநர் தேநீா் விருந்து: காங்கிரஸ், தி.மு.க புறக்கணிப்பு
தொடர்ந்து பல்வேறு துறைகளில் சாதனைகள் படைத்த காவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு முதல்வர் ரங்கசாமி பதக்கங்கள் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினார். இதனையடுத்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சியும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்களின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
தொடர் விடுமுறை காரணமாக புதுச்சேரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் இந்த வண்ணமயமான சுதந்திர தின விழாவை கண்டுகளித்தனர். இந்த விழாவில் சபாநாயகர் செல்வம், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்ட அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil