Advertisment

ஸ்மார்ட் சிட்டி ஊழல்: கேட் ஏறி குதித்து முறையிட்ட புதுவை எம்.எல்.ஏ

புதுச்சேரி சுயேச்சை எம்.எல்.ஏ நேரு கேட்டில் ஏறி குதித்து தலைமை செயலாளரிடம் முறையிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

author-image
WebDesk
New Update
puducherry independent MLA jumped over gate to complaint about smart city scam Tamil News

Puducherry

புதுச்சேரி

Advertisment

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் நடப்பதாக கூறி சுயேட்சை எம்.எ.ல்ஏ நேரு இன்று தலைமை செயலகத்தை முற்றுகையிட்டார். தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் இல்லாததால் முற்றுகையை கைவிட்டார். பின்னர், கம்பன் கலையரங்கில் நடந்த சுற்றுச்சூழல் விழாவில் தலைமை செயலாளர் ராஜீவ் வர்மா பங்கேற்ற தகவல் கிடைத்து, உடனடியாக சுயேச்சை எம்.எல்.ஏ நேரு தனது ஆதரவாளர்களுடன் கம்பன் கலை அரங்கம் சென்றார்.

publive-image

அங்கு அவர் வரும் தகவல் கிடைத்ததும் கம்பன் கலையரங்கத்தின் 2 வாயில் கேட்களையும் போலீசார் இழுத்து மூடினர். போலீசாரிடம் நேரு எம்.எல்.ஏ வந்து திறக்க சொன்னபோதும் அவர்கள் திறக்கவில்லை. இதனால், கோபமடைந்த எம்.எல்.ஏ கேட்டில் ஏறி குதித்து உள்ளே சென்றார். அவரை தொடர்ந்து அவரது ஆதரவாளர்களும் கேட் மீது ஏறி சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது, தொடர்ந்து அவர் விழா மேடைக்கு கீழே இருந்தபடி அதிகாரிகளின் அலட்சியபோக்கை கண்டித்து பேசினார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Puducherry India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment