இந்திய ரிசர்வ் பட்டாலியன் படையை புதுச்சேரி காவல்துறையுடன் இணைக்க வேண்டும்: கவர்னரிடம் சுயேச்சை எம்.எல்.ஏ கோரிக்கை

இந்திய ரிசர்வ் பட்டாலியன் படை பிரிவை புதுச்சேரி காவல்துறையுடன் இணைக்க வேண்டும் என்று சுயேச்சை எம்.எல்.ஏ அங்காளன் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் சந்தித்து மனு கொடுத்துள்ளார்.

இந்திய ரிசர்வ் பட்டாலியன் படை பிரிவை புதுச்சேரி காவல்துறையுடன் இணைக்க வேண்டும் என்று சுயேச்சை எம்.எல்.ஏ அங்காளன் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் சந்தித்து மனு கொடுத்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Puducherry Independent MLA P Angalane urge to join India Reserve Battalions with police force Tamil News

இந்திய ரிசர்வ் பட்டாலியன் படை பிரிவை புதுச்சேரி காவல்துறையுடன் இணைக்க வேண்டும் என்று சுயேச்சை எம்.எல்.ஏ அங்காளன் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் சந்தித்து மனு கொடுத்துள்ளார்.

இந்திய ரிசர்வ் பட்டாலியன் படை பிரிவை புதுச்சேரி காவல்துறையுடன் இணைக்க வேண்டும் என்று சுயேச்சை எம்.எல்.ஏ அங்காளன் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் சந்தித்து மனு கொடுத்துள்ளார். இது தொடர்பாக சட்டமன்றத்தில் பலமுறை பேசியும் புதுச்சேரி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்

Advertisment

சுயேச்சை எம்.எல்.ஏ அங்காளன் அந்த மனுவில் தெரிவித்து இருப்பதாவது:-

1965 ஆண்டு ஆரம்பத்தில் புதுச்சேரி காவல்துறை தனியாகவும், புதுச்சேரி ஆயுதப்படை பிரிவு தனியாக செயல்பட்டு வந்தது. அதன் பின்னர் 1985 இல் தனியாக செயல்பட்டு வந்த புதுச்சேரி ஆயுதப்படை பிரிவை புதுச்சேரி காவல் துறையுடன் இணைத்தனர். 10 ஆண்டுகளுக்கு பிறகு கூட ஊர்காவல் படைவீரர்களை புதுச்சேரி காவல் துறையுடன் இணைக்கிறீர்கள். இதே போல், புதுச்சேரியிலும் இந்திய ரிசர்வ் பட்டாலியன் படை பிரிவை புதுச்சேரி காவல்துறையுடன் இணைக்க வேண்டும்.

மேலும், புதுச்சேரி காவல்துறையில் காவலர்கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் ஆரம்பிக்க வேண்டும். காவலர்களுக்கு விபத்து காப்பீடு திட்ட மற்றும் இலவச மருத்துவ சிகிச்சை திட்டத்தை அமல்படுத்த வேண்டும். புதுச்சேரி காவல்துறையில் பணிபுரியும் காவலர்களுக்கு அரசு விடுமுறை மற்றும் சனி, ஞாயிறு விடுமுறை ஆகியவை கணக்கிட்டு அதற்கான இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். புதுச்சேரி காவலர்களுக்கு இரவு பணிக்கான பார்ப்பவர்களுக்கு இரவு பணி படித்தொகை கொடுக்க வேண்டும். புதுச்சேரி இந்திய ரிசர்வ் பட்டாலியன் படை பிரிவுக்கு நிரந்தர இடத்தை ஏற்படுத்தி தர வேண்டும். 

Advertisment
Advertisements

மேலும், 2015 ஆண்டில் இணைந்த ஒன்பது காவலர்களுக்கு சம்பளம் குளறுபடிகள் இருக்கிறது. டி குரூப் ஊழியர்கள் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற பல்வேறு குளறுபடிகளை சரி செய்ய வேண்டும்.
 புதுச்சேரி இந்திய ரிசர்வ் பட்டாலியன் படை பிரிவை புதுச்சேரி காவல்துறையுடன் இணைக்க வேண்டும். மேலே குறிப்பிட்டது 6 கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கனவே புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பல சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

புதுச்சேரி காவல்துறையில் 18.09.2007 தேதியில் (Puducherry police personnel co operative housing society Ltd - No. P .772) என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டு ஒரு சில மாதங்களுக்குள் செயல்படாமல் இருந்த காரணத்தால் ஒரு சில வருடங்களுக்குப் பிறகு முழுவதுமாக சங்கம் கலைக்கப்பட்டது. எல்லா மாநிலங்களில் மற்றும் யூனியன் பிரதேசம் உள்ள அனைத்து காவல்துறையிலும் பணிபுரியும் அனைவருடைய நலனுக்காக காவலர் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 

அதேபோல் புதுச்சேரி அரசு ஊழியர்கள் வெவ்வேறு துறையில் பணிபுரிவர்களுக்கு தனித்தனியாக 25க்கும் மேற்பட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் புதுச்சேரியில் சிறப்பாக இன்றளவும் செயல்பட்டு வருகிறது. புதுச்சேரி காவல்துறை மற்றும் இந்திய ரிசர்வ் பட்டாலியன் பணிபுரியும் காவலர்கள் முதல் அதிகாரிகள் வரை அனைவரும் பயனடையும் விதமாக புதுச்சேரி காவல்துறையில் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் (Puducherry Police co-operative houseing society) அமைக்க வேண்டும். 

எல்லா மாநில காவல் துறையில் பணியின்போது விபத்து மற்றும் படுகாயங்களை அடைந்தால் அதற்கான அளவைப் பொறுத்து இழப்பீட்டுத் தொகை அரசு தருகிறது மேலும் மருத்துவ சிகிச்சைக்காக இலவச மருத்துவ காப்பீடு திட்டம் உள்ளது. இதேபோல் புதுச்சேரி காவல்துறை மற்றும் இந்திய ரிசர்வ் பட்டாலியன் படைப்பிரிவில் பணிபுரியும் காவலர்கள் முதல் அதிகாரிகள் வரை உள்ளவர்களுக்கு அரசு சார்பாக இலவச மருத்துவ காப்பீடு (Police health insurance scheme) திட்டம் வழங்க வேண்டும்.

புதுச்சேரி காவல்துறையில் வார விடுமுறை மற்றும் அரசு விடுமுறை ஆகியவற்றை கணக்கிட்டால் நூறு நாளுக்கு மேல் வருகிறது. ஆனால் புதுச்சேரியில் காவல் துறையில் குறைந்தபட்சம் 30 நாள் கணக்கிட்டு அதற்கான சம்பளத்தை தருகிறார்கள். இனிவரும் காலங்களில் புதுச்சேரி காவல்துறையில் பணிபுரியவர்களுக்கு இப்போது கொடுப்பதை விட இரு மடங்காக உயர்த்தி தர வேண்டும் அல்லது சனி ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களை கணக்கிட்டு அதற்கான சம்பளத்தை வழங்க ஆலோசனை செய்ய வேண்டும்.

புதுச்சேரியில் சுகாதாரத்துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறை போன்ற துறைகளில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு இரவு பணிக்கான இரவு படித்தொகை கணக்கிட்டு தருகிறார்கள். புதுச்சேரி காவல்துறை மற்றும் இந்திய ரிசர்வ் பட்டாலியன் பணிபுரியவர்களும் அனைவரும் இரவு பணி செய்து வருகிறார்கள் ஆனால் இதற்கான இரவு பணி படி (Night duty allowance) தொகையை கொடுப்பதற்கு பரிசீலனை செய்ய வேண்டும்.

 இந்திய ரிசர்வ் பட்டாலியன் படைப்பிரிவில் 2015 ஆண்டில் இணைந்த ஒன்பது காவலர்களுக்கு மற்ற காவலர்கள் சம்பள நிலைய விட ஒரு கிரேடு சம்பள குறைவாக உள்ளது. டி குரூப் ஊழியர்களுக்கு சரியான பதவி உயர்வு மற்றும் சம்பளம் குறைபாடுகள் இருக்கிறது. இந்திய ரிசர்வ் பட்டலின் படைப்பிரிவில் பல ஆண்டுகளாக புதிய காவலர் தேர்ந்தெடுக்கப்படாமல் இருக்கிறது. அதேபோல் அமைச்சகம் ஊழியர்கள், ஓட்டுநர்கள் என்ற பல பதவிகள் 20 ஆண்டுகளாக பூர்த்தி செய்யாமல் காலியாக இருக்கிறது இதுபோல பல ஆண்டுகளாக பல்வேறு குறைகள், பிரச்சனைகள் இந்திய ரிசர்வ் பட்டாலியன் படைப்பிரிவில் நிலவு வருகிறது. அதை சரி செய்ய வேண்டும்.

எல்லா மாநில காவல் துறையிலும் இந்திய ரிசர்வ் பட்டாலியன் 10 ஆண்டுகளுக்கு பிறகு மாநில காவல் துறையுடன் இணைக்கப்படுகிறது. குறிப்பாக ஹரியானா, கேரளா, தமிழ்நாடு போன்ற பல மாநிலங்களில் இதுபோல செயல்பட்டு வருகிறது. இதற்கு முன்னர் 1965 ஆண்டு ஆரம்பத்தில் புதுச்சேரி காவல்துறை தனியாகவும், புதுச்சேரி  ஆயுதப்படை பிரிவு தனியாக செயல்பட்டு வந்தது. அதன் பின்னர் 1985இல் தனியாக செயல்பட்டு வந்த புதுச்சேரி ஆயுதப்படை பிரிவை புதுச்சேரி காவல் துறையுடன் இணைத்தனர். 10 ஆண்டுகளுக்கு பிறகு கூட ஊர்காவல் படைவீரர்களை புதுச்சேரி காவல் துறையுடன் இணைக்கிறீர்கள். இதே போல் புதுச்சேரியிலும் இந்திய ரிசர்வ் பட்டாலியன் படை பிரிவை புதுச்சேரி காவல்துறையுடன் இணைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி. 

Puducherry

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: