Puducherry | Tamilisai Soundararajan: புதுச்சேரியில் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம், எதிர்க்கட்சித் தலைவர் தி.மு.க சிவா ஆகியோரது தலைமையில் காமராஜ் சாலையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்திலிருந்து தான் போதைப்பொருள் அதிகமாக புதுச்சேரி மாநிலத்திற்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது என புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியதற்கு இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தொண்டர்கள் சிலர் கவர்னர் மாளிகை நோக்கி ஓடினர். தொண்டர்கள் நேரு விதி வழியாக கவர்னர் மாளிகையை நோக்கி ஓட முயன்றனர். அப்போது தலைமை தபால் நிலையம் அருகில் வேகமாக ஓடி வந்த தொண்டர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
மேலும் போலீசார் கவர்னர் மாளிகையை சுற்றி போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்தினர். இருப்பினும், போலீசார் தடுத்து நிறுத்த முடியாமல் திணறினர். ஒரு சில தொண்டர்கள் அதையும் மீறி போலீசாரை தள்ளிவிட்டு கவர்னர் மாளிகை அருகில் சென்று கோஷங்களை எழுப்பினர். போலீசார் அவர்களை கைது செய்து அங்கிருந்த அப்புறப்படுத்தினர். மொத்தமாக இந்தியா கூட்டணியைச் சேர்ந்த 250 பேரை போலீசார் கைது செய்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“