காரைக்கால் மீனவர்கள் மீது அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்திய இலங்கை கடற்படையை கண்டித்து காரைக்காலில் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கருப்பு கொடி கட்டி மீனவர்கள் அரசுக்கு தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.
/indian-express-tamil/media/post_attachments/f07735ae-7b0.jpg)
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மீனவர்கள் மீது அத்துமீறி இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்தை கண்டித்தும், துப்பாக்கி சூட்டில் காயம்பட்டு இலங்கை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மூன்று மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தியும், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை அரசால் 40 இலட்சம் அபராதம் மற்றும் 9 மாதம் சிறை தண்டனை விதித்து இலங்கை சிறையில் உள்ள படகு ஓட்டுனரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்காத மத்திய மற்றும் புதுச்சேரி மாநில அரசை கண்டித்து மீனவர்கள் இன்று சனிக்கிழமை 5-வது நாளாக காரைக்கால் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
/indian-express-tamil/media/post_attachments/97a8282f-bc3.jpg)
இந்த நிலையில், காரைக்கால் மாவட்ட மீனவர்கள், மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 500-க்கும் மேற்பட்ட படகுகளில் இருந்த தேசிய கொடியை அகற்றி விட்டு, கருப்பு கொடி கட்டி மீன்பிடித் துறைமுகத்தில் மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்களது போராட்டங்களுக்கு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இரண்டு நாட்களில் ரயில் மறியல் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுள்ளதாக மீனவர்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.