/indian-express-tamil/media/media_files/2025/08/30/puducherry-priyanka-2025-08-30-23-16-39.jpg)
பெண் என்று பார்க்காமல் என்னை அமைச்சர் டார்ச்சர் செய்கிறார் பெயர் சொல்ல விரும்பவில்லை என காரைக்கால் பெண் எம்.எல்.ஏ. கண்ணீருடன் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்
புதுச்சேரி முன்னாள் அமைச்சரும், காரைக்கால் நெடுங்காடு கோட்டுச்சேரி சட்டமன்ற உறுப்பினருமான சந்திர பிரியங்கா எம்.எல்.ஏ தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வீடியோவில், பொதுவாக நன்றி சொல்வதற்கு தான் வீடியோக்கள் வெளியிட்டு வருவார்கள். இப்ப அதெல்லாம் மாறிவிட்டது. எனது அப்பா (முன்னாள் அமைச்சர் சந்திரகாசு) அரசியல் இருந்தார். அதனால் நான் அரசியல் வந்தேன் என சிலர் கூறுகின்றனர்.
உண்மைதான் அரசியல் எனக்கு பிடித்திருந்தது. அதனால் அரசியலுக்கு வந்தேன். அதையெல்லாம் தாண்டி மக்களுக்கு பிடித்த சேவைகளை செய்யணும். புதுச்சேரியில் பொறுத்தவரை. இதுதான் உண்மை. இதை மீறி அரசியலுக்கு வர முடியாது. அண்மையில் சில வாரங்களுக்கு முன்பு ஒரு கட்டவுட் பிரச்சனை பூதாகரமாக வந்தது. மக்களுக்கு இடையூறாக கட்டவுட்டுகள் திறக்கக் கூடாது என்பது கோர்ட்டு உத்தரவு.
எனக்கு பிறந்தநாள் என்றால் பலர் கட்டவுட் வைப்பார்கள். அதை ஓரளவுக்கு தான் நாம் கட்டுக்குள் கொண்டு வர முடியும். சிலர் அதையும் தாண்டி கட்டவுட் வைப்பார்கள். அவர்கள் வைக்கிறார்களே என்று எதிர்க்கட்சினர் வைப்பார்கள். அதற்கு மேல் ஒரு பிரச்சனை. ஒரு வாரம் முன்பு ஒரு சம்மன் எனக்கு வந்தது. கட்டவுட் வைத்ததற்கு காரணம் சொல்ல வேண்டும் என. எஸ் எஸ் பி , எஸ் பி இன்ஸ்பெக்டர், எஸ்ஐ, கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் அதையெல்லாம் தாண்டி அந்த கட்டவுட்டில் என் படம் இருந்ததற்காக நானும் பதில் சொல்ல வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தது.
அதை செய்தது யார் என பார்த்தால் கோர்ட் செலவு எல்லாம் செய்ய முடியாத ஒரு ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த நபர். இதன் பின்னணியில் இருப்பது ஒரு அமைச்சர் என்பது நன்றாக தெரிகிறது. நான் அமைச்சராக இருந்த போது மக்களுக்கான சேவையை செய்து வந்தேன். பல விஷயங்களில் டார்ச்சர் தந்த அமைச்சர் உள்ளிட்ட பலரை புறந்தள்ளிவிட்டு நான் ஒதுங்கி இருப்பேன். ஒரு பெண்ணுக்கு எவ்வளவு டார்ச்சர் செய்ய முடியும் என்பதை அதன் மூலம் தெரிய வந்தது.
நம்ம கூட இருப்பவர்களை நாம் தான் காக்க வேண்டும். நான் ஒரு அமைச்சராக இருந்தப்ப பல டார்ச்சர்களை தந்தார். இப்ப எம்எல்ஏவாக இருக்கும் போது அதையும் மீறி டார்ச்சர் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அதாவது நம்மள அவங்க டார்ச்சர் பண்றாங்களாம். இது கூடவா எனக்கு தெரியாது. ஒரு அமைச்சர் என்றால் எவ்வளவு வேலை இருக்கும் என்பது நானும் அமைச்சராக இருந்த போதுதான எனக்கு தெரியும்.
அதையெல்லாம் தாண்டி ஒரு பெண்ணுக்கு எவ்வளவு டார்ச்சர் தர முடியுமோ அந்த அளவுக்கு டார்ச்சர் கண்டு கொண்டிருக்கிறார். ஓட்டு போட்ட மக்களை விட்டுவிட்டு என்னை டார்ச்சர் பண்ணுவது கொடுமையான விஷயம். இதுவே ஒரு ஆண் எம்எல்ஏவாக இருந்தால் செய்ய முடியுமா. நான் ஒரு பெண் என்பதால் இந்த கெட்ட எண்ணம் உள்ளது இது போன்ற ஆட்கள் இனியாவது திருந்த வேண்டும். இதையே ஒரு வேலையாக நினைத்துக் கொண்டு நீங்கள் செய்தீர்கள் என்றால் எவ்வளவு ஃப்ரீயா இருக்கீங்களா என்று தெரிய வருகிறது.
இந்த நேரத்தில் அந்த அமைச்சர் தொகுதியில் சென்று கேட்டால் எவ்வளவு பிரச்சனைகள் தொகுதியில் உள்ளது என தெரிய வருகிறது. முதலில் அந்த மக்கள் பிரச்சனையை முடிக்க பாருங்கள். ஒரு பெண் வளர்ந்து கஷ்டப்பட்டு மேல வந்து விடக்கூடாது என்ற கெட்ட எண்ணம் வைத்துக் கொள்ளாதீர்கள். இதை ஒரு அட்வைஸ் ஆகவே நான் சொல்கிறேன். ஒரு பெண்ணை எவ்வளவு டார்ச்சர் பண்ண முடியுமோ அவ்வளவு டார்ச்சர் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். இது போன்ற அரசியலை எனக்கு எனது அப்பா (சந்திரகாசு) சொல்லித் தரவில்லை.
இப்போது கூட இந்த வீடியோ எதற்கென்றால் நீங்கள் டார்ச்சர் பண்ணுவது எனக்கு தெரியாது என நினைத்து சந்தோஷப்பட்டு கொண்டிருக்கிறீர்கள். இது நன்றாகவே எனக்கு தெரிகிறது. தெரிந்தாலும் உங்கள் பெயரை சொல்லாமல் நான் இதுவரை என் வேலையை செய்து கொண்டிருக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் நான் வீட்டுக்குப் போகும் பாதையெல்லாம் ஸ்பை வைத்திருக்கிறாள். குறிப்பாக என் போன் டீட்டெயிலை அமைச்சர் பதவியை வைத்து. வாங்குகிறார்கள் என்பது எனக்கு நன்றாக தெரியும். நான் ஒரு சேப்டியான இடத்தில் இல்லை என்பதும் தெரியும்.
அதையெல்லாம் மீறி பீல் பண்ணி ஒரு புகார் தரலாம் என ஒரு உயர் அதிகாரியை சென்று சந்தித்தால், அவர் சொல்கிறார் வேண்டுமென்றால் உங்கள் சொத்துக்களை எல்லாம் வேறு யார் பெயரிலாவது எழுதி வைத்து விடுங்கள். இதெல்லாம் சகஜம் என அவர் கூறுகிறார். அந்த அதிகாரிக்கு இவர் எவ்வளவு அழுத்தம் கொடுத்து இருந்தால் இது போல் பேசுவார். முன்னாள் அமைச்சர், ஒரு எம்எல்ஏ ஸ்தானத்தில் இருக்கும் எனக்கே இப்படி என்றால், சாதாரண மக்களுக்கு என்ன செய்வார்கள்.
— Chandirapriyanga (@CPriyanga_offl) August 30, 2025
ஒன்றே ஒன்றுதான் அது மக்களுக்கு நல்லது செய்யுங்கள். பெண்ணால் சாதனை படைக்க முடியாது என்பது இல்லை. இதுவரை நான் உங்கள் பெயரை எந்த இடத்திலும் சொல்லவில்லை. மக்களுக்கும் நான் யாரைக் குறிப்பிட்டு பேசுகிறேன் என இந்நேரம் தெரிந்திருக்கும். இதற்கு ஒரே ஒரு காரணம். எனது சிஎம் தான். எனது அப்பா ஸ்தானத்தில் உள்ள அவரது பேச்சை மதித்து தான் நான் பேசாமல் இருக்கிறேன். எலக்சன் வேலையை மட்டும் பாரு. வேறு எதையும் காதில் வாங்கிக் கொள்ளாதே என அவர் எனக்கு அட்வைஸ் சொல்லி உள்ளார்.
நமக்கெல்லாம் முதலாளி மக்கள்தான். அவங்களுக்கு நல்லதை செய்ய முன் வாருங்கள். இல்லை என்னிடம் பணம் உள்ளது நான் என்ன ஆட்டம் வேணாலும் போடுவேன் என்றால், அதற்கு நான் ஆள் இல்லை. நான் உங்களிடம் வரவேண்டும் என்ற அவசியமும் இல்லை. திருப்பி திருப்பி எனக்கு தொந்தரவு செய்றீங்க. குறைந்தபட்ச இந்த வீடியோ எதுக்குன்னா என்ன நீங்க தொந்தரவு செய்றீங்க என்று எனக்கும் தெரியும் என்பதை உங்களுக்கு காட்டத்தான். இன்னும் எட்டு மாசம் தான் இருக்கு எலக்சனுக்கு. அதனால எலக்சன் வேலையை, மக்கள் வேலையா பாருங்க.
என்னையும் பார்க்க விடுங்க. ஒரு பெண் தானே என ஏராளமாக பார்க்காதீங்க .எல்லா தொகுதியிலும் பெண்கள் ஓட்டு தான் அதிகம். நீங்களும் வாழுங்க என்னையும் வாழ விடுங்கள் அவ்வளவுதான். என சமூக வலைதளங்களில் புலம்பி வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது
பாபு ராஜேந்திரன் புதுச்சேரி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.