புதுச்சேரி அரசு, கலை, பண்பாட்டுத்துறை சார்பில் கடற்கரை சாலை, காந்தி திடலில் நடைபெற்ற "ஒவ்வொரு வீட்டிலும் மூவண்ணக்கொடி" மக்கள் இயக்கத்தை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் கையெழுத்திட்டு செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 13) தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில், ஆண்டாள், சுப்பராயன் உள்ளிட்ட புதுச்சேரி சுதந்திரப் போராட்டத் தியாகிகள் ஐந்து பேருக்கு துணைநிலை ஆளுநர் நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார். விழாவில், தேசப்பற்று, தேசிய ஒருமைப்பாடு ஆகியவற்றை பிரதிபலிக்கக் கூடிய வகையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
முதலமைச்சர் ந. ரங்கசாமி, சட்டப்பேரவை தலைவர் ஆர். செல்வம், பொதுப்பணித்துறை மற்றும் கலை, பண்பாட்டுத்துறை அமைச்சர் க. லட்சுமிநாராயணன், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் ஜெ சரவணன் குமார், சட்டப்பேரவைத் துணைத்தலைவர் பி. ராஜவேலு, தலைமைச் செயலர் சரத் சௌகான், களைப்பண்பாட்டுத்துறை செயலர் திரு நெடுஞ்செழியன் மற்றும் அதிகாரிகள் விழாவில் கலந்து கொண்டனர்.
முன்னதாக அரங்கிற்கு வந்த துணைநிலை ஆளுநரை முதலமைச்சர், அமைச்சர் பெருமக்கள் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“