பாபு ராஜேந்திரன் புதுச்சேரி
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் தலைமையில் திட்டக் குழு கூட்டம் தலைமைச் செயலக கருத்தரங்கம் வளாகத்தில் நடைபெற்றது. இதில் முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயலர் உட்பட அனைத்து துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் முடிவில் சி.பி ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
எழுச்சமிகு புதுச்சேரி என்பது தான் இக்கூட்டத்தின் முதல் நோக்கம். புதுச்சேரி முன்னேற்றத்திற்கான அனைத்து கருத்துகளும் ஆலோசிக்கப்பட்டது. பெண்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரேஷன் கடை திறப்பு, பெண்களின் கருத்துக்களை கேட்டறிந்து அத்திட்டம் மாற்றி அமைக்கப்படும். நீட் தேர்வு வேண்டாம் என்பவர்கள் உச்சநீதிமன்றம் தான் செல்ல வேண்டும்.
எந்த திட்டங்களை எல்லாம் முன்பு அறிவித்தோமோ, அதற்கு முன்னுரிமை தரப்படும். கடன் தள்ளுபடிக்கான எல்லா முயற்சியும் எடுக்கப்படும். ஜூலை மாதம் ரூ.12 ஆயிரத்து 700, கோடியில் முழு பட்ஜெட் தாக்கல் செய்ய திட்டமிட்டு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இவ்வாறு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“