/indian-express-tamil/media/media_files/2025/03/24/VgQt6uddbjgrcb5WRemr.jpg)
புதுச்சேரி மாஹே பிராந்தியத்தில் கடந்த 50 ஆண்டுகளாக சர்வே நடத்தப்படாததால் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், உடனடியாக டிஜிட்டல் சர்வே நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் பரம்பத் வலியுறுத்தி உள்ளார்
புதுச்சேரி மாஹே பிராந்தியத்தில் கடந்த 50 ஆண்டுகளாக சர்வே நடத்தப்படாததால் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், உடனடியாக டிஜிட்டல் சர்வே நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் பரம்பத் வலியுறுத்தி உள்ளார்
புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று காங்கிரஸ் கட்சியின் மாஹே சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் பரம்பத் பேசுகையில், "புதுச்சேரி பிராந்தியமான மாஹே தொகுதி கேராளவில் உள்ள கண்ணூர், கோழிக்கோடு ஆகிய இரு மாவாட்டங்களுக்கு இடையே உள்ளது. இந்த இரு மாவட்டங்களிலும் நில சர்வே செய்யும் பணி டிஜிட்டல் ஆக்கப்பட்டுள்ளது. மாஹேவில் கடைசியாக சர்வே நடந்தது 1974-ம் ஆண்டு. கடந்த 50 வருடங்களாக சர்வே நடக்காததால் பொது மக்களுக்கு பல விதமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நில சர்வே நடக்காததால் ஒரே சர்வே நம்பரில் நிறைய கட்டுமான பணிகள் பாதிக்கப்படுகின்றன.
வங்கிக்கடன் வாங்குவதற்கும், புது வீடு கட்டுவதற்கு அனுமதி பெறும்போது ரீ சர்வே நம்பர் என்கிற காரணத்தால் கால தாமதம் ஏற்படுகின்றது. டிஜிட்டல் சர்வே அடிப்படையில் ஒவ்வொரு நிலத்திற்கும் புது சர்வே என போட்டு உரிவையாளர்களுக்கு பட்டா வழங்கினால் தேவையில்லாத காலதாமதத்தை தவிர்க்கலாம். நீதி மன்றத்தில் முடங்கி கிடக்கும் சிவில் வழக்குகள் தீர்ப்பு வழங்குவதற்கு இது உபயோகமாகும்.ஆகையில் மாஹே பிராந்தியத்தில் டிஜிட்டல் சர்வேவை நடத்துமாறு முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்." என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.