கந்து வட்டி கொடுமையால் தற்கொலை: விஜய்க்கு த.வெ.க தொண்டர் உருக்கமான கடிதம்

"த.வெ.க. தலைவர் விஜய் அண்ண என்னோட கடைசி ஆசை. இந்த மாதிரி 10%, 15% வட்டிவிட்டு சித்திரவதை செய்யும் அனைவர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று விஜய்க்கு த.வெ.க தொண்டர் உருக்கமான கடிதம் எழுதியுள்ளார்.

"த.வெ.க. தலைவர் விஜய் அண்ண என்னோட கடைசி ஆசை. இந்த மாதிரி 10%, 15% வட்டிவிட்டு சித்திரவதை செய்யும் அனைவர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று விஜய்க்கு த.வெ.க தொண்டர் உருக்கமான கடிதம் எழுதியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Puducherry man commits suicide debt write letter to TVK Vijay Tamil News

"த.வெ.க. தலைவர் விஜய் அண்ண என்னோட கடைசி ஆசை. இந்த மாதிரி 10%, 15% வட்டிவிட்டு சித்திரவதை செய்யும் அனைவர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று விஜய்க்கு த.வெ.க தொண்டர் உருக்கமான கடிதம் எழுதியுள்ளார்.

புதுச்சேரி சாரம் கொசப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மேரி ஸ்டோரீஸ் (வயது 38). ஏற்கனவே ஒருவருடன் திருமணமாகி, இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் 10 வருடங்களுக்கு பிறகு கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து, கோவிந்தசாலையை சேர்ந்த விக்ரமன் (வயது 35) என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

Advertisment

இந்நிலையில், 45 அடி சாலையில் உள்ள கோழிக்கறி கடையில் விக்ரமன் வேலை செய்து வந்தார். தொழிலுக்காகவும், சரக்கு வாகனம் மேரி ஸ்டோரிஸ் வாங்குவதற்காகவும் அதிக வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். அந்த வாகனம் மூலமாக தண்ணீர் கேஸ் வியாபாரமும் செய்து வந்தார். கடந்த 3 மாதத்திற்கு முன்பு விக்ரமன் பைக் விபத்தில் சிக்கி வாகனத்தை ஓட்டவும், வேலைக்கு செல்லவும்முடியாமல் அவதிப்பட்டு வந்தார்.

இந்த சூழலில், கடன் கொடுத்தவர்கள், வட்டி கேட்டு தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த விக்ரமன்,  நேற்று இரவு வீட்டில் கயிற்றால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உருளையன் பேட்டை போலீசார் வழக்குப் பதிவு விசாரணை செய்து வருகின்றனர். இந்த விசாரணையின் போது, போலீசாருக்கு விக்ரமன் எழுதிய 3 பக்க கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில் விக்ரமன் கூறியிருப்பதாவது:- 

நான் தனசேகர் என்பவரிடம் கடந்த 3 ஆண்டில் ரூ.3,80,000 வரை பணம் வாங்கி உள்ளேன். ஆனால் இப்போது வரை 10% வட்டி வீதம் ரூ.38,000 மாதம் தவறாமல் வட்டி கட்டி வந்தேன். விபத்தில் சிக்கியபிறகும், தேதி தவறாது வட்டி கட்டி வந்தேன். இந்த மாதம் ரூ.17,000 மட்டும் கொடுத்ததால் என்னை தனசேகர் சித்ரவதை செய்தார்.  வட்டி தராததால் என் மனைவி மேரியையும், மகள் ஏஞ்சலையும் வட்டி கொடுக்கிறவரை வீட்டுக்கு கொண்டு வந்து விடு என்று கூறி என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கினார்.

Advertisment
Advertisements

நான் இருக்கும் நிலையில் என் இவனை ஒன்றும் செய்ய முடியாது தான். நான்இறந்தால் இந்த (கந்துவட்டி கொடுத்து சித்திரவதை செய்யும்) மிருகத்தின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். இதற்கு ஆதாரம் செல் போனில் உள்ள வாட்ஸ்அப் மெசேஜ்-ல் உள்ளது. இதேபோல் பிட்டிக் ஊழியர் செல்வம் என்னிடம் 1 லட்சம் 20 வட்டி தருவதாக பொய்கூறி ரூ.79,000 பறித்துக்கொண்டார்.

எனது டாடா ஏசியை விற்று இந்த தொகையை கொடுத்தேன். மிகவும் கடினமான சூழ்நிலையில் நம்பிக்கை துரோகம் செய்து விட்டார். நான் இறக்க இவரும் ஒரு காரணம். சாரம் சிக்கன் கடை செல்வத்திடம், எனக்கு விபத்து ஆனதால் இவரிடம் என் மனைவி ரூ.30,000 பெற்று இருந்தார். வட்டி மாதம் ரூ.3,000. 2 மாதம் வட்டி தொகையை தவறாமல் மேரி கொடுத்து வந்தார். ஆனால் செல்வம் கால அளவு 2 மாதம் முடிந்து விட்டது.  பணத்தை கொடு, இல்லை இனி மீட்டர் வட்டி தர வேண்டும் என்று மனைவியை சித்திரவதை செய்தார்.

என் மனைவி மேரி இதை என்னிடம் சொன்னார். மீட்டர் வட்டி என்றால் ரூ.30,000-க்கு இனி 15 நாளைக்கு ஒருமுறை ரூ.3,000 தர வேண்டும். அதாவது மாதம் ரூ.6000 வட்டி தர வேண்டும் என்று சொல்லி சித்திரவதை செய்தார். இதனால் என் மனைவி தினமும் அழுகைதான்.  வீட்டில் மகிழ்ச்சி என்று ஒன்று இல்லாமல் போனது.  வட்டிக்குவிட்டு 'சித்திரவதை செய்யும் இவர்களுக்கு தகுந்த நீதி வழங்க வேண்டும் என்பதற்காக நான் என் உயிரை விடுகிறேன்.

த.வெ.க. தலைவர் விஜய் அண்ண என்னோட கடைசி ஆசை. இந்த மாதிரி 10%, 15% வட்டிவிட்டு சித்திரவதை செய்யும் அனைவர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்ணா உங்களது ஆட்சியில் இந்த மாதிரி வட்டிக்கு விட அனைவரும் பயப்பட வேண்டும். தயவு செய்து என் மனைவி மற்றும் பிள்ளைக்கு ஏதேனும் படிப்புக்கு மற்றும் வாழ்க்கைக்கு பணம் உதவி செய்யுமாறுமிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். ஏஞ்சல் மிகவும் நன்றாக படிப்பாள். படிக்க வையுங்கள் அண்ணா பிளீஸ். உங்களை நம்பிதான் உயிரை விடுகிறேன். பிளீஸ் என் குடும்பத்துக்கு உதவி செய்யுங்கள் அண்ணா.

புதுவை அரசுக்கு ஒரு வேண்டுகோள். நான் இறந்த பிறகு என் உடம்பில் உள்ள உறுப்புகள் எடுத்து கொண்டு அதற்கு மாறாக மேரி என் மனைவி மற்றும் பிள்ளைக்கு பணம் ஏதாவது தரவேண்டும் என்று வேண்டுகிறேன். விமல் இனியாவது வேலைக்கு செல். அம்மா, மேரி, ஏஞ்சல் அனைவரையும் நன்றாக பார்த்துக்கொள்.

இவ்வாறு அவர் அந்த கடிதத்தில் கூறியுள்ளார். 

செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி. 

Puducherry Tamilaga Vettri Kazhagam

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: