scorecardresearch

புதுச்சேரி மருத்துவ கல்வி அரசு இடஒதுக்கீடு: ‘நியாயமான முடிவு தேவை’ – அ.தி.மு.க செயலாளர் அன்பழகன்

மருத்துவரான கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் மருத்துவ கல்வி அரசு இடஒதுக்கீடு விவகாரத்தில் நியாமான முடிவை எடுக்க ஏன் தயங்குகிறார் என அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Puducherry Medical Education Govt Reservation: ADMK Secretary Anbazhagan
AIADMK Secretary Anbazhagan

பாபு ராஜேந்திரன் – புதுச்சேரி

புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை அரசின் இட ஒதுக்கீடாக பெற வேண்டும் என மத்திய அரசின் சட்டம் இருந்தும் புதுச்சேரி அரசு ஆண்டுதோறும் 36 சதவீத இடங்களில் மட்டும் அரசின் இட ஒதுக்கீடாக பெறுகிறது.

இதனால் ஆண்டுதோறும் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்த 60 மாணவர்களின் மருத்துவக் கல்வி தனியாருக்கு தாரை வார்க்கப்படுகிறது.

தனியார் மருத்துவக் கல்லூரியில் உள்ள மொத்தம் 450 இடங்களில், நியாயமாக சட்டப்படி நாம் பெறவேண்டிய 225 இடங்களுக்கு பதிலாக, 165 இடங்கள் பெறுவதால், மீதமுள்ள 60 மருத்துவ கல்வியிடங்கள் 60 கோடிக்கு தனியார் மருத்துவர் கல்லூரிகளால் விற்கப்படுகிறது.

மருத்துவரான நம் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இப்பிரச்சனையில் ஏன் நியாயமான முடிவை எடுக்க தயங்குகிறார்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், இந்த ஆண்டு 50 சதவீத இடங்களை பெறவில்லை என்றால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அனுமதி பெற்று, மாணவர்கள் மற்றும் பொதுமக்களை திரட்டி அதிமுக போராட்டத்தில் ஈடுபடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Puducherry medical education govt reservation admk secretary anbazhagan