புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த சிறுமியை அதே பகுதியை சேர்ந்த முதியவர் விவேகானந்தன் மற்றும் வாலிபர் கருணாஸ் ஆகியோர் பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்தனர்.
மேலும் சிறுமியின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி சாக்கடையில் வீசினர். இச்சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
![WhatsApp Image 2024-09-16 at 09.45.58](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/Wwig4bnx4OLFp9VUpXFx.jpeg)
இந்த வழக்கில் முதியவர் விவேகானந்தன் மற்றம் கருணாஸ் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டனர். இருவரும் புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் முதியவர் விவேகானந்தன் சிறையில் உள்ள கழிவறையில் இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
செய்தி: பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“