சட்டமன்ற உறுப்பினர் மு. வைத்தியநாதன் சட்டமன்றத்தில் கொண்டு வந்த தனித்தீர்மானம்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தொடர்ந்து மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக இருக்கின்ற மாநில அந்தஸ்து பல ஆண்டுகளாக மத்திய அரசால் நிறைவேற்றப்படாமல் இருந்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சி காலத்திலும் மாற்றுக் கட்சிகள் ஆட்சியில் இருந்த காலத்திலும் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து தொடர்ந்து மாநில அந்தஸ்து கோரி மத்திய அரசை வலியுறுத்தியும் சட்டமன்றத்தில் மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களை சந்தித்து வலியுறுத்தியும் மாநில அந்தஸ்தின் கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து கிடைக்காத காரணத்தினால் நிர்வாக ரீதியாகவும் வளர்ச்சி ரீதியாகவும் மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கை மட்டுமல்ல அனைத்து அரசியல் கட்சிகளும் ஒற்றுமையாக மாநில அந்தஸ்தின் கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து மத்திய அரசை கோரி வருகிறோம். ஆனால் மத்தியில் உள்ள அரசு மாநிலத்தினுடைய நியாயமான கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு மனதில்லாமல் பல காரணங்களை சொல்லி மௌனம் காக்கிறது.
நிதி நிர்வாகம் மற்றும் முன்னேற்றம் இவைகளில் மாநிலம் சிறந்து விளங்க வேண்டும் என்றால் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதை தவிர வேறு வழியில்லை, ஆகவே இந்த அவையில் புதுச்சேரிக்கு மணிலா அந்தஸ்து உடனடியாக மத்திய அரசு வழங்க வேண்டுமென இந்த சட்டப்பேரவை வலியுறுத்துகிறது என்ற தீர்மானத்தை முன்மொழிகிறேன் என்று கூறியுள்ளார்.