புதுச்சேரியில் நரிக்குறவர்கள் இலவச மனை பட்டா வழங்க கோரி, மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கனுக்கு ஊசி மணி, பாசிமணிகளை மாலையாக அணிவித்து மனு அளித்தனர்.
புதுச்சேரி வில்லியனூர் மூர்த்தி நகர்,கொம்பாக்கம் மற்றும் திருக்காஞ்சி மெயின் ரோடு ஆகிய பகுதியில் 70 ஆண்டுகளுக்கு மேலாக சாலை ஓரங்களில் தார்ப்பாய் அமைத்து வசித்து வரும் நரிக்குறவர்கள் மற்றும் குருவிக்கார மக்களுக்கு இலவச மனைப்பட்ட வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக மனு அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அவர்களின் மனுக்கள் மீது அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
/indian-express-tamil/media/media_files/2025/02/17/pA8rzwxruJciGWCaggD2.jpeg)
இந்த நிலையில், பழங்குடியினர் விடுதலை இயக்கத்தின் மாநில செயலாளர் ஏகாம்பரம் தலைமையில் புதுச்சேரி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் வந்திருந்தனர். அவர்கள் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கனை நேரில் சந்தித்து அவர்கள் எடுத்து வந்த ஊசிமணி பாசிமணி மாலைகளை மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கனுக்கு மாலையாக அணிவித்து ஆரவாரமாக கைதட்டி மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் குலத்துங்கன் நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தார்.