புதுச்சேரி மாநிலத்தில் வீடுகளுக்கு குழாய் மூலமாக கியாஸ் இணைப்பு வழங்கும் திட்டம் தொடங்கப்பட ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் புதுவை அரசு தொழில் மற்றும் வணிகத் துறை புதுவை நகர எரிவாயு வினியோக கொள்கை-2023 திட்டத்தின்கீழ் வீடுகளுக்கு குழாய் மூலம் சமையல் கியாஸ் இணைப்புக்கான வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதில், புதுச்சேரி மாநிலத்தில் புதுவை, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் ரூ.700 கோடியில் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் வீடுகள், வணிக பயன்பாடு, தொழில்கள் மற்றும் போக்குவரத்துக்கும் கியாஸ் பயன்படுத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதற்காக புதுவை அரசின் தலைமை செயலர் தலைமையில் உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் குழாய் மூலம் கியாஸ் இணைப்பு வழங்குவதற்கான வரைவுக் கொள்கை மீதான பொதுமக்களின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கலாம். மேற்கண்ட வரைவு கொள்கையை தொழில்துறை இயக்குனரகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://industry.py.gov.in சென்று பார்வையிடலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்தி: பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“