புதுச்சேரி திறன்மிகு ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்; அடிக்கல் நாட்டிய ரங்கசாமி
புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 31 கோடி செலவில் புதுச்சேரி பேருந்து நிலையத்தை திறன்மிகு ஒருங்கிணைந்த பேருந்து நிலையமாக மாற்றுவதற்கான பூமி பூஜையை முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்
புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 31 கோடி செலவில் புதுச்சேரி பேருந்து நிலையத்தை திறன்மிகு ஒருங்கிணைந்த பேருந்து நிலையமாக மாற்றுவதற்கான பூமி பூஜையை முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்
Advertisment
புதுச்சேரி பேருந்து புதிய பேருந்து நிலையத்திலிருந்து கடலூர் விழுப்புரம் திண்டிவனம் சென்னை உள்ளிட்ட பல்வேறு பெருநகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
மேலும் நகர பகுதிகளிலும் பேருந்துகள் இயக்கப்படுவதால் நாள்தோறும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கான பொதுமக்கள்இதனை பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் இந்த பேருந்து நிலையம் 31 கோடி ரூபாயில் செலவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திறன்மிகு ஒருங்கிணைந்த பேருந்து முனையமாக நவீன மயமாக்கப்படுகிறது.
இதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முதலமைச்சர் ரங்கசாமி பூஜை செய்து பேருந்து நிலைய கட்டுமான பணியை தொடங்கி வைத்தார்.
இந்த பூமி பூஜை விழாவில் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் நேரு என்கிற குப்புசாமி உள்ளிட்ட ஸ்மார்ட் சிட்டி திட்ட அதிகாரிகள் புதுச்சேரி பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”