/indian-express-tamil/media/media_files/2025/07/05/toll-rate-2025-07-05-17-09-45.jpg)
புதுச்சேரி நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை புதுச்சேரி அருகே அடுத்தடுத்து பைபாஸ் கட்டணம் சுயேட்சை எம் எல் ஏ நேரு மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார் கொடுத்தார்.
அந்த மனுவில் விழுப்புரம், புதுச்சேரி, நாகை நான்கு புறவழிச்சாலை பாகூர் சேலியமேட்டில் சுங்கச்சாவடி அமைக்கப்படுவதாக தெரியவருகிறது. இங்கு சுங்கச்சாவடி அமைந்தால் புதுச்சேரி மற்றும் தமிழகத்தை ஒட்டியுள்ள கிராமப்புற மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். அதேநேரத்தில் சுங்கச்சாவடி அமைக்கும்போது குறிப்பிட்ட கிலோமீட்டர் தூர அளவை கடைப்பிடிக்க வேண்டும் என்று தெரிகிறது.
ஒரு சுங்கச்சாவடிக்கும் மற்றொரு சுங்கச்சாவடிக்கும் ஏறக்குறைய 60-லிருந்து 70-கிலோமீட்டருக்கு அடுத்துதான் சுங்கசாவடிகள் அமைக்க வேண்டும் என்று விதிகள் உள்ளதாக தெரிகிறது. ஆனால் புதுச்சேரி, சேலியமேடு பகுதியில் அமைக்க இருப்பதாக கூறப்படும் சுங்கச்சாவடி புதுச்சேரி, மதகடிப்பட்டை ஒட்டி மிக அருகே தமிழக பகுதியான கெங்காராம்பாளையம் சுங்கசாவடியில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தூரத்திற்குள்தான் இருக்கிறது.
இப்படி குறிப்பிட்ட தூரத்தில் இரண்டு சுங்கச்சாவடிகள் இருப்பது விதிமுறைகளுக்கு எதிரானது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாவதுடன் உள்ளுர் மக்களும், பள்ளி கல்லூரி மாணவர்களும், ஏழை, எளிய விவசாயிகளும் அதிக தொகையை சுங்கச்சாவடிக்காக செலவழிக்க நேரிடும். புதுச்சேரி மாநிலம் ஒரு சிறிய மாநிலம் திட்டு திட்டான நிலப்பரப்புகளுடன் தமிழக பகுதிகளும்,
புதுச்சேரி பகுதிகளும் ஒட்டியிருக்கிறது. புதுச்சேரி, மதகடிப்பட்டிலிருந்து தமிழக பகுதியான கடலூர் எல்லை வரை இடைப்பட்ட பல பகுதிகள் அடுத்தடுத்து இருப்பதால் புதுச்சேரி, தமிழ்நாடு ஆகிய இவ்விரண்டு மாநில மக்களும் அவரவர் வசிக்கும் பகுதிகளுக்கு எந்தவொரு தடையும், சிரமமும் இல்லாமல் பயணித்து வருகிறார்கள்.
இப்படியிருக்கும் நிலையில் மேற்கண்ட சேலியமேட்டில் சுங்கச்சாவடி அமைத்தால் இரு மாநில மக்களும் பெரும் பாதிப்படைவதுடன், அவர்களின் சுதந்திரமான போக்குவரத்து உரிமை பறிக்கப்படும் நிலைமை ஏற்படும். எந்தவொரு தடையும் சிரமமும் இல்லாமல் பயணித்து வருகிறார்கள். இப்படியிருக்கும் நிலையில் மேற்கண்ட சேலியமேட்டில் சுங்கச்சாவடி அமைத்தால் இரு மாநில மக்களும் பெரும் பாதிப்படைவதுடன், அப்படியிருக்கையில் மத்திய, மாநில அரசுகள் சுங்கச்சாவடிகள் அமைத்து வரி வசூல் செய்வது முரண்பாடாகும். இது மோட்டார் வாகனம் பயன்படுத்துபவர்களிடம் கொள்ளையடிக்கும் செயலாக இருக்கிறது.
அதேநேரத்தில் ஒரு மாநில எல்லையிலிருந்து 10- முதல் 15- கிலோ மீட்டருக்கு அப்பால் தான் சுங்கசாவடி அமைக்க வேண்டும் என்று விதி உள்ளதாக தெரிகிறது. அப்படி பார்த்தால் மேற்கண்ட புதுச்சேரி எல்லை பகுதியான சேலியமேட்டில் சுங்கச்சாவடி அமைக்க சாத்தியமில்லை என்று கூறப்படுகிறது. பகுதியில் சுங்கசாவடி அதேநேரத்தில் மேற்கண்ட சேலியமேட்டு அமைப்பதற்கு புதுச்சேரி மாநில அரசின் எந்தவொரு அனுமதியும் சுங்கசாவடி அமைக்கும் நிர்வாகம் பெறவில்லை என்று தெரிகிறது.
அப்படியிருக்கையில் இந்த இடத்தில் சுங்கசாவடி அமைப்பதை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருப்பது கேள்விக்குறியாக இருக்கிறது. இதை சம்பந்தப்பட்ட துறையினர் கவனத்தில் கொள்ளாமல் இருப்பது கண்டிக்கதக்கது. ஏற்கனவே இதுபோன்ற ஒரு சுங்கசாவடி புதுச்சேரி நகரை ஒட்டி பட்டானூரில் உள்ளது. இது புதுச்சேரியிலிருந்து சேதராப்பட்டு Industrial Estate க்கு செல்லும் சாலைக்கு முன்பு உள்ளது.
இதனால் 4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சேதராப்பட்டு தொழிற்சாலையில் வேலை பார்க்கும் புதுச்சேரியைச் சேர்ந்த பொதுமக்கள் சுங்கசாவடியை கடப்பதற்கு அதிக பணம் செலவழித்து இந்த சாலையை கடக்கவேண்டி உள்ளது. ஆகையால் மேற்கண்ட நிலைமைகளை கருத்தில் கொண்டு புதுச்சேரி சேலியமேட்டில் சுங்கசாவடி அமைக்க இருப்பதை மத்திய அரசு உடனே தடுத்து நிறுத்துவதுடன் புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு கிராமப்புற மக்களின் சாலையில் போக்குவரத்து செய்யும் உரிமையை நிலைநாட்ட தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
பாபு ராஜேந்திரன் புதுச்சேரி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.