Advertisment

பழங்கால நாணயங்கள், ரூபாய் நோட்டுகளுக்கு அதிக விலை; பேஸ்புக்கில் மோசடி மக்களே உஷார்

பழங்கால நாணயங்கள், ரூபாய் நோட்டுகளை அதிக விலைக்கு எடுத்துக் கொள்கிறோம் என்ற பேஸ்புக் பதிவை நம்பி ரூ. 35 ஆயிரம் பணத்தை இழந்த நபர். சைபர் கிரைம் போலீஸார் விசாரணை

author-image
WebDesk
New Update
FAcebook

ஆன்லைன் மோசடி - சைபர் கிரைம் போலீஸார் விசாரணை

பழங்கால நாணயங்கள் ரூபாய் நோட்டுகளை அதிக விலைக்கு எடுத்துக் கொள்கிறோம் என்று வந்த facebook பதிவை நம்பி 35 ஆயிரம் ரூபாய் பணத்தை இழந்த நபர் அளித்த புகாரையடுத்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisment

புதுச்சேரி வில்லியனூரைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் சமூக வலைதளமான ஃபேஸ்புக் பக்கத்தில் உங்களிடம் பழங்கால நாணயங்கள் அல்லது ரூபாய் நோட்டுகள் இருந்தால் நாங்கள் மிக அதிக விலை கொடுத்துக் வாங்கிக் கொள்கிறோம் என்று வந்த விளம்பரத்தை பார்த்து மேற்கண்ட நபர்களை தொடர்பு கொண்டுள்ளார். 

அதற்கு அவர்கள் உங்களிடம் என்ன இருக்கிறது என்று கேட்க ராஜேஷ் உடனே தன்னிடம் 50 ஆண்டிற்கும் முந்தைய ஐந்து ரூபாய் நோட்டு ஒன்று இருக்கிறது என்று கூறியிருக்கிறார். அவர்கள் அதை உங்கள் அருகில் வைத்து புகைப்படம் எடுத்து அனுப்புங்கள் நாங்கள் உண்மையிலேயே அது பழங்கால நோட்டு தானா என்று சோதனை செய்துவிட்டு  வருகிறோம் என்று கூறியிருக்கிறார்கள். 

அடுத்து ஒரு மணி நேரத்தில் ராஜேஷை தொடர்பு கொண்டு  இது பழங்கால நோட்டு தான் நாங்கள் இதை 4 லட்சம் ரூபாய்க்கு எடுத்துக் கொள்கிறோம் என்று கூறிவிட்டு எங்கள் ஆட்கள் உங்களிடம் வந்து அந்த ஐந்து ரூபாய் நோட்டை பெற்றுக்கொண்டு உடனடியாக உங்களுக்கு வங்கி கணக்கில் பணம் செலுத்துவார்கள் கூறியதாக ராஜேஷ் தெரிவித்தார். 

உங்கள் வங்கி கணக்கில் இருந்து எங்களுக்கு ஆயிரம் ரூபாய் பணம் அனுப்புங்கள் என்று கூற அனைவரும் ஆயிரம் ரூபாய் பணத்தை அவர்கள் சொன்ன வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைத்திருகிறார்கள். மேலும் 4 லட்சம் ரூபாய்க்கு ஜிஎஸ்டி இன்னும் இருப்பதால் முதலில் 25 ஆயிரம் ரூபாய் பணத்தை எங்களுக்கு அனுப்புங்கள் என்று சொல்கிறார். மீண்டும் பத்தாயிரம் ரூபாய் அனுப்புங்கள் என்று சொன்னவுடன் 35 ஆயிரம் ரூபாய் பணத்தை அனுப்பி பிறகு அவர்களிடம் இருந்து எந்த தகவலும் இவர்களுக்கு வராததால் இணைய வழி காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்டவர்கள் புகார் கொடுத்துள்ளதையடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.  

ஒவ்வொரு நாளும் இணைய வழி மோசடி நபர்களிடம் ஏமாந்ததாக இருபதுக்கும் மேற்பட்ட புகார்கள் புதுச்சேரி இணையவழி காவல் நிலையத்திற்கு வந்து கொண்டிருப்பதாகவும் ஆகவே இணைய வழியில் வரும் எந்த ஒரு விளம்பரம், வேலை வாய்ப்பு, அதிக பணம் போன்ற விளம்பரங்களை நம்ப வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர். 

உங்கள் பிள்ளைகளை கைது செய்துள்ளோம் உங்கள் பார்சலில் போதைப்பொருள் சென்றது உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளோம் போன்ற தகவல்கள் வந்தாலும் நம்ப வேண்டாம் என்றும் 1930 என்ற இணைய வழி காவல் நிலையத்திற்கு ஆன்லைனில் புகார் செய்யுமாறும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India scam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment