புதுச்சேரி பெரம்பை பகுதியில் உள்ள பழைய பிளாஸ்டிக் குடோனில் நண்பகலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் அனைத்து பிளாஸ்டிக் பொருட்களும் எரிந்து நாசமானது. இதனால், அப்பகுதி முழுதும் புகைமண்டலமாக காட்சியளித்தது.
புதுச்சேரி வில்லியனூர் அருகே உள்ள பெரம்பை பகுதியில் பழைய பிளாஸ்டிக் குடோன் ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த குடோனில் இன்று சனிக்கிழமை நண்பகல் தீடீரென தீ பற்றி மளமளவென எரிந்தது. இந்த தீயனாது குடோன் முழுவதும் பரவியதால் தீ மற்றும் கரும்புகை வானளவு பரவியது.
இதனை அடுத்து, வில்லியனூர் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சென்று 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து காரணாமாக அனைத்து பழைய பிளாஸ்டிக் பொருட்களும் எரிந்து நாசமானது. தீ விபத்து குறித்து வில்லயனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.