scorecardresearch

ஜப்தி நடவடிக்கைக்கு புதுவை பல்கலை., எதிர்ப்பு; அதிகாரிகள் மீது போலீசார் வழக்குப் பதிவு

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் ஜப்தி நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த அதிகாரிகள் மீது கோர்ட் உத்தரவுப்படி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்

Pondicherry University
புதுவை பல்கலைக்கழகம்

ஜப்தி நடவடிக்கையை தடுத்த பல்கலைக்கழக அதிகாரிகள் மீது கோர்ட்டு உத்தரவுப்படி புதுச்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

புதுவை பல்கலைக்கழகத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு பி.இ பிலிமோரியா நிறுவனம் கட்டிய ஆடிட்டோரிய கட்டுமானத்துக்கு கூடுதல் செலவினம் ஏற்பட்டது.

இதையும் படியுங்கள்: அடிக்காசு உயர்வுக்கு எதிர்ப்பு: புதுவையில் டெம்போக்கள் திடீர் வேலை நிறுத்தம்; பொதுமக்கள் அவதி

கூடுதல் பணம் வழங்க டெல்லியில் உள்ள ஒப்பந்ததாரர்கள் விவகாரங்கள் தீர்க்கும் நடுவர் மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், 2018ல் கட்டுமான நிறுவனத்துக்கு புதுவை பல்கலைக்கழகம் ரூ.5.39 கோடி வழங்க தீர்ப்பளிக்கப்பட்டது. அதேநேரம், அசல், வட்டியுடன் ரூ.6.48 கோடி வழங்க உத்தரவிடக்கோரி புதுவை 3வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் ரூ.1.29 கோடி பல்கலைக்கழக நிர்வாகம் வழங்கியது. மீதி தொகையை தராமல் காலதாமதம் செய்தது.

இந்தநிலையில், கடந்த 7 ஆம் தேதி பல்கலைக்கழக ஆடிட்டோரியம், சுற்றியுள்ள நிலங்களை ஜப்தி செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது. நீதிமன்ற அமீனா வெங்கட் தலைமையில் அதிகாரிகள் பல்கலைக்கழகம் சென்றனர். அவர்களை செக்யூரிட்டி மற்றும் 4 அதிகாரிகள் தடுத்தனர்.

இதனால் அமீனா மற்றும் அதிகாரிகள் திரும்பிச் சென்று ஜப்தி நடவடிக்கையை தடுத்ததாக தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்ய கோர்ட்டு உத்தரவிட்டது. பல்கலைக்கழக காவலர் சுந்தர்ராஜன் மற்றும் 4 அதிகாரிகள் மீது காலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பாபு ராஜேந்திரன், புதுச்சேரி

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Puducherry police files case against university officials according to court order